Wednesday, October 28
Shadow

இந்தியன் படபிடிப்புவிபத்து இன்று போலீசில் ஆஜர் ஆகிறார் இயக்குனர் ஷங்கர்

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் நடித்து வரும் படம் இந்தியன் 2. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக 3 பேர் இறந்தனர். இந்த விபத்து ஏற்பட்டதன் காரணத்தை அறிய போலீசார் தொடர்ந்து இதன்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கமலஹானிடம் விசாரணை நடத்திய போலீசார், மேலும் அந்த இடத்தில் இருந்த பலரிடமும் விசாரணை நடத்தினர். தற்போது இயக்குனர் சங்கரை இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். விபத்து நடந்த இடமான தனியார் பிலிம் சிட்டியில் சங்கர் அவர்களை இன்று ஆஜராக வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் அந்த சம்மனில் குறிப்பிட்டுள்ளதாக செய்தி வட்டாரம் தெரிவிக்கிறது.

எனவே டைரக்டர் சங்கர் இன்னிக்கு ஃபிலிம் சிட்டியில் விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுது.