Thursday, October 29
Shadow

தளபதி மாஸ்டர் ரிலிஸ் பிரபல இயக்குனர் மற்றும் ரசிகர்களின் குமுறல்

இதுவரைக்கும் அஃபீசியலா எந்த நிதியும் வழங்காத விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் ‘மாஸ்டர்’.

இந்தப் படத்தோட ஒர்க் அம்புட்டும் முடிஞ்சு இன்னிக்கு (ஏப்ரல் 9) ரிலீசாகி இருக்க வேண்டியது.

கொரோனா வழங்கிய ஊரடங்கு உத்தரவால், மாஸ்டர் முடக்கப்பட்டு இருக்கார்

ஆனாலும் இன்னிக்கு மார்னிங்-கில் இருந்தே விஜய் ரசிகர்கங்க, ஹய்யோ நம்ம ‘மாஸ்டர்’ கொண்டாட்டம் எப்படியெல்லாம் இருந்திருக்கும் அப்படீன்னு சிலாகித்து பகிர்ந்து வருகிறார்கள். இம்மாதிரியான தொடர் பதிவுகளால் இந்திய அளவில் #MasterFDFS என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.

சில திரையரங்குகளும் இன்று எங்கள் திரையரங்கம் எப்படி இருந்திருக்க வேண்டியது என ட்வீட் செஞ்சிருந்தாய்ங்க.

இந்ந்நிலையில், இந்த ‘மாஸ்டர்’ படத்தின் திரைக்கதையிலும் வசனத்திலும் பணிபுரிந்த ‘ஆடை’ இயக்குநர் ரத்னகுமார் ”கொரோனா தொற்று ஏற்படவில்லையென்றால் மாஸ்டர் தற்போது ரிலீஸ் ஆகியிருக்கும். பல சோகப் பதிவுகளைப் பார்க்க முடிகிறது. ஒரு ரசிகனாக இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. காற்று மாசு, போராட்டங்கள், ரெய்ட், தற்போது இது. எப்படியோ நமக்குதான் இறுதி வெற்றி கிடைக்கும். உயிர் பிழைப்பதுதான் முதலில். பிறகுதான் கொண்டாட்டங்கள். திடீரென இந்த செல்ஃபி பழைய நினைவுகளைத் தூண்டுகிறது”. – அப்படீன்னு கமெண்ட் போட்டது கூட ஆயிரக்கணக்கானோர் ஷேர் பண்றாய்ங்க