Wednesday, October 28
Shadow

நடிகர் விக்ரம் சினிமாவுக்கு முழுக்கு என்று வீண் வதந்தி நம்பவேண்டாம் !

பிரபல நடிகர் விக்ரம் திரைத்துறையிலிருந்து விலகுவதாக மும்பை ஊடகம் தொடங்கி இங்குள்ள சில ஆன்லைனில் செய்தி வெளியாச்சு. இதற்கு பல மணி நேரம் கழிச்சு விக்ரம் தரப்பு மறுப்பு தெரிவிச்சிருக்குதாம்

முப்பது வருசத்துக்கு முன்னாடி அதாவது 1990ல் ரிலீஸான என் காதல் கண்மணி படத்தின் மூலம் அறிமுகமான விக்ரமை கோலிவுட் அம்புட்டு லேசில் இடம் கொடுக்கலை… இதை அடுத்து டப்பிங் ஆர்ட்டிஸ்டா இருந்தார்

ஏகப்பட்ட தடைகளுக்கு பிறகு பாலா டைரக்சனில் 1999ல் வெளியான சேது படம் மிகப்பெரிய விக்ரம் வாழ்க்கையில் மிக பெரிய உயரத்தை கொடுத்தது.

அந்த படத்திற்கு அப்பாலே, சியான் விக்ரம் என்ற அடைமொழியோட வலம் வந்தார்.

அந்த புண்ணியம் தேடி காசிக்கு போன சேது படத்தின் வெற்றிக்கு பிறகு, தில், ஜெமினி, தூள், சாமி, காசி என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக விக்ரம் தமிழ் சினிமாவில் மாறியவர் ஒவ்வொரு படங்களிலும், வித்தியாசமாகவும், உயிரைக் கொடுத்தும் நடித்து, சிறந்த நடிகராகவும் ரசிகர்கள் மனங்களை வென்றார்.

அப்பாலே ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் திரைப்படம் விக்ரமுக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்தது.

அம்பி, ரெமோ, அந்நியன் என மல்டிபிள் பர்சனாலிட்டி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார் விக்ரம்.

மீண்டும் ஷங்கர் உடன் இணைந்து விகரம் நடிச்ச ஐ படத்த்தால் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் சிரமத்துக்கு ஆளாக ஆரம்பிச்சது.

அப்பேர்பட்டவர் இப்போ, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி உள்ள கோப்ரா படத்தில் 20 கெட்டப்புகளில் சியான் விக்ரம் நடிச்சிருக்குதாவும் இந்த படமே தன் மனசுக்கு நெறவா இருப்பதாலும் இனி தன் மவனை சூப்பர் ஸ்டார் ஆக்க வேண்டும் என்று லட்சியம் எடுத்திருப்பதாலும் திரைத்துறையிலிருந்தே விலகுவதாக மும்பை ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. இதற்கு விக்ரம் தரப்பு நேற்று வரைக்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காதவங்க இன்னிக்கு நூன் ‘விக்ரம் நடிப்புக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் ஒரு படம் என பல படங்களில் நடித்து வருகிறார். வைரஸ் தொற்று பாதிப்பால் மக்கள் பீதியடைந்துள்ள இச்சமயத்தில் இதுபோன்ற தவறான செய்தியை வெளியிடுவது பொறுப்பற்றத்தனம்.’ அப்படீன்னு மறுப்பு சொல்லி இருப்பதா ஒரு சேதி வந்துருக்கு.