

கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ஜெனிமி. படம் வெற்றி என்பதைவிட இந்த படத்தில் வந்த ஓ போடு பாடல் மாபெரும் வெற்றிபெற்று பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றிபெற்றது. எங்கு பார்த்தாலும் ஓ போடு, ஓ போடு என இந்த படத்தின் பாடல்தான் ஒலித்தது.
கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டு உருவான படம்தான் ஜெமினி. விக்ரம் படத்தில் நாயகனாக நடித்தார். வட சென்னை ரவுடிகளை களமாகக் கொண்டு வந்தது. நாயகிக்கு சௌகார் பேட்டை பிண்ணனி. தில், காசி ஆகிய படங்களின் வெற்றியோடு இருந்த விக்ரம், ஹைப் ஏற்றிய ஓ போடு பாடல், ஏவிஎம்மின் விளம்பர உத்தி என பல அட்வாண்டேஜ்களோடு திரைக்கு வந்து பெரிய வெற்றியைப் பெற்றது இந்தப் படம். விக்ரமுக்கு, தில் கொடுத்திருந்த ஆக்சன் ஹீரோ இடத்தை இந்தப்படம் உறுதி செய்தது. அதிலும் தேவர் ஃபிலிம்ஸ் பாணியில் பட பூஜையன்றே பட வெளியீட்டுத் தேதியை அறிவித்து களத்தில் இறங்கியது ஏவிஎம் நிறுவனம். சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு எல்லா செண்டர்களிலும் தியேட்டர் நிரம்பியது இந்தப்படத்திற்குத்தான்
இந்நிலையில் இந்த படம் குறித்து இன்னிக்கு ட்விட் போட்டிருந்த ஏ வி எம் பற்றி பேசிக் கொண்டிருந்த போது நம்ம கட்டிங் கண்ணையா சொன்ன தகவல் இதோ :
இந்த இந்த ஜெமினி படத்தில் முதலில் கதாநாயகனான நடித்தது தல அஜித்-தாக்கும். அதாவது காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’ இரண்டும் அஜித்தை ஒரு நடிகன் என்பதைத் தாண்டி ஒரு நாயகனாக செதுக்கிய, உருவாக்கிய முக்கியமான திரைப்படங்கள். அந்தப் படங்களை இயக்கிய சரண் மீண்டும் அஜித்திற்காக ஒரு கதையை தயார் செய்தார். அஜித்தின் 25ஆவது படமான அமர்க்களம் வெற்றியைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி இணைய இருந்த அந்தக் கதையை அஜித்திற்காகவே செதுக்கினார் சரண். அஜித்தின் மாஸை அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்லும் விதமாக உருவாகியிருந்தது அந்தக் கதை.
இன்னொரு புறம் அஜித்தும் அமர்க்களம், தீனா, சிட்டிசன் என ஒரு மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக உருவாகியிருந்தார். அப்போது அஜித்தின் முன் இரண்டு கதைகள் இருந்தன. ஒன்று, நடிகர் சிங்கம்புலி (அப்போது ராம்சத்யா என்ற பெயரில்) சொன்ன ‘ரெட்’ படத்தின் கதை. இன்னொன்று சரண் உருவாக்கிய ‘ஜெமினி’ கதை. ‘ஜெமினி’ கதையைவிட ‘ரெட்’ கதை நன்றாக இருப்பதாக எண்ணிய அஜித் ‘ஜெமினி’யை மறுத்து ‘ரெட்’ படத்தில் நடித்தார்.
அதுனாலே ஏறுமுகம் என்ற பட தலைப்பில் அஜித் ஹீரோவாக ஒப்பந்தமாகி சில நாட்கள் நடித்த படத்தைதான் விக்ரமை வைத்து ‘ஜெமினி’ யாக முடித்தாராம் சரண்..
