
இன்னிக்கும் ஆன் லைன்-னில் பிசியாக இருப்பவர்.
இந்த ஆன் லைன மூலமா இப்போ கூட ஒரு நல்ல காரியத்தை செஞ்சு வாரார். அதுதான் துட்டுக்கு பாட்டு. நீங்கள் விரும்பிய ஒரு பாடலை சின்மயி பாட கேட்க வேண்டுமா? அல்லது உங்கள் பிறந்த நாளுக்கு, அல்லது நண்பர்கள் பிறந்த நாளுக்கு அவர்களை வாழ்த்தி பாட வேண்டுமா?
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். கொரோனா ஊரடங்கால் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகி உள்ள ஒரு தினக்கூலி பணியாளர் குடும்பத்துக்கு ஆன்லைனில் பணம் அனுப்பி விட்டு, அந்த விபரத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சின்மயிக்கு அனுப்பி வைத்தால் சின்மயி பாட்டுப்பாடி உங்களுக்கு அனுப்பி வைப்பார். அவரும் இடைவிடாது பாடி வருகிறார். சின்மயிக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
ஏற்கனவே நம்ம சிங்கர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக தனது டிரஸ்ட் மூலம் சமூகவலைதளம் வாயிலாக ஆன்லைனில் ரசிகர்களுக்கு பாட்டு பாடி மகிழ்வித்து, அதற்கு குறைந்த கட்டணத்தில் நிதி திரட்டி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.
