Friday, November 6
Shadow

நடிகை சுனைனா பிறந்தநாள் பதிவு

தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர் சுனைனா

இதே ஏப்ரல் 17, 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பிறந்தார். இவர் நாக்பூர் மவுண்ட் கார்மல் கேர்ள்ல் ஹைஸ்கூலில் படிச்சுட்டு நடிக்க வந்துட்டார்.

தற்போது கல்வியின் அவசியம் புரிந்து வர்த்தக இளங்கலை படிப்பு படிப்பதற்கு ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்துள்ளார்

எல்லா கேரக்டருக்கும் பொருத்தமான முகச்சாயல் கொண்ட சுனைனா நகுலுடன் இணைந்து நடித்த காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர்.Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது.

இவர் நடித்த படங்கள்: சில்லு கருப்பட்டி, காளி, தொண்டன், கவலை வேண்டாம், நம்பியார், வன்மம், சமர், நீர்ப்பறவை, வம்சம், யாதுமாகி, மாசிலாமணி, காதலில் விழுந்தேன்.. இவைகளில் நீர்பறவை, சில்லுக் கருப்பட்டியில் நன்றாக நடித்து ஸ்கோர் செய்திருந்தார்..

ஆனாலும் டாப் ஆர்டிஸ்ட் லிஸ்டில் இடம் பிடிக்க ஆசைப்பட்டு சில பல ஆண்டுகளுக்கு முன்னால் சுனைனா தனது பெயரை ‘அனுஷா’ என்று மாற்றி இருந்தார். அது பற்றிக் கேட்ட போது ‘அது முற்றிலும் எனது பெற்றோருடைய முடிவு. சின்ன வயசிலேயே ஜோதிடர் சொன்ன எழுத்தில் எனது பெயரை வைக்க முடிவு செய்திருந்தனர். ஆனால், அப்போது அதன்படி வைக்காமல் எனக்கு சுனைனா என்று பெயர் வைச்சாய்ங்க .. இப்போது, மீண்டும் ஜோதிடரை சென்று பார்த்த போது, எனக்குப் பொருத்தமான எழுத்தில் பெயர் வைத்தால் நல்லது என்று சொன்னார்கள். அதனால் எனது பெயரை ‘அனுஷா’ என மாற்றியிருக்கிறார்கள். பெயரில் என்ன இருக்கிறது…எனது நிஜ கேரக்டர் எப்போதும் அப்படியேதான் இருக்கும்…இருந்தாலும் எனது புதிய பெயர் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது, ” அப்ட்டின்னார்

அதே மாதிரி நடிகைகள் மீ டூ வில் பாலியல் தொல்லைகளை பகிர்ந்து வரும் நிலையில் சுனைனாவும் தனக்கு ஏற்பட்ட தொந்தரவுகளை வெளிப்படுத்திய போது,
‘‘எனக்கு அப்போது 12 வயது இருக்கும். தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் செல்வேன். ஆட்டோ ஓட்டுநர் அருகில் அமர்ந்து செல்ல மாணவர்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால் அந்த டிரைவர் என்னை மட்டும் அருகில் உட்கார வைத்துக்கொள்வார். அதை பெருமையாக நினைப்பேன். அவர் அருகில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி செல்வேன். அப்போது அந்த டிரைவர் வெளியே சொல்ல முடியாத சில்மி‌ஷங்கள் செய்வார். அவரது செயல் அப்போது எனக்கு புரியவில்லை. இப்படி 10–ம் வகுப்பு படித்து முடிக்கும்வரை அந்த டிரைவர் என்னை பலாத்காரம் செய்தார். ஒரு கட்டத்தில் எனக்கு புரிந்தது. உடனே ஓட்டுநர் மீது கோபம் வந்தது. எனக்கு நேர்ந்த கொடுமையை வீட்டில் சொல்லவில்லை. இப்போது அந்த டிரைவரை தேடுகிறேன். அவன் சட்டை காலரை பிடித்து ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க ஆத்திரத்தோடு இருக்கிறேன்.’’அப்படீன்னு சொல்லி இருந்தார் (கட்டிங் கண்ணையா)

ஆனால் மறுபடியும் சுனைனா-வா மாறியவர் ஏற்கெனவே மேரேஜ் ஆகி டைவோர்ஸ் ஆன ஆக்டர் கிருஷ்ணா-வை லவ் பண்றதாவும், அவரோட மேரேஜ் கூட முடிஞ்சிட்டுதுன்னும் சில செய்திகள் வந்தாலும் அதெல்லாம் பொய்ய்ய்ய்ய்ய்யீ. நம்பாதீங்க.. என்று மெல்லிய குரலில் சொல்லி விட்டு அசராமல் ஆக்டிங் -ங்கில் கவனம் செலுத்தி வாரார்.. அவரிடம் ‘ஹேப்பி பர்த் டே சொல்லிட்டு இப்ப நடிச்சு வரும் ட்ரிப் படம் குறிச்சு விசாரிச்சப்போ, ‘முழுப் படத்திலும் காட்டுக்குள் நடித்தது சிரமமா இருந்ததா?”

“லொக்கேஷன் செட் ஆகலை, காட்டுல இருக்கோம்ன்ற நினைப்பே எனக்கு இல்ல. அந்த இடத்தை ரொம்பவே என்ஜாய் பண்ணேன். முதல் ஷெட்யூல் 20 நாள் ஷூட்டிங்கும் தலைக்கோணம்ங்கிற காட்டுப் பகுதியில் நடந்தது. அதே காட்டுக்குப் பக்கத்துலதான் தங்கியிருந்தோம். அதுமட்டுமில்லாம, அதே இடத்துலதான் `காதலில் விழுந்தேன்’ க்ளைமேக்ஸும் எடுத்தாங்க. ஆபத்தான நாய் வகையான `பிட் புல்’ங்கிற ப்ரீடுகூடதான் இந்தப் படத்துல நடிச்சிருக்கேன். கோபம் வந்துட்டா வளர்ந்தவங்களையே கடிச்சு வெச்சிடுமாம். அதுகூட சில ஆக்‌ஷன் போர்ஷன்ல நடிச்சிருக்கேன். ஜாலியா இருந்தாலும் ஒரு பக்கம் பயமாதான் இருந்தது. என்னைவிட இயக்குநர் ரொம்ப பதட்டப்பட்டார். கடைசியில அந்த நாய்கூட ஃப்ரெண்டு ஆகிட்டேன்.” அப்படீன்னார்

அது மட்டுமின்றி ““தொடர்ந்து வெப் சீரிஸ் பண்றதால சினிமா வாய்ப்புகள் குறையாதா?” -ன்னு சில பேர் இன்னமும் கேக்கறாங்க . இது மாதிரி என்னைத் தேடி வெப் சீரிஸ்ல நடிக்க ஆரம்பிச்ச பிறகுதான், பட வாய்ப்புகள் நிறைய வருது. எந்த மொழியில வெப் சீரிஸ் பண்ணாலும் அது இந்தியிலேயும் டப் ஆகுது. அதைப் பார்த்துட்டு, அந்தப் பக்கமும் எனக்கு நிறைய ரசிகர்கள் உருவாகியிருக்காங்க. எனக்கு மெசேஜும் பண்ணி வாழ்த்துறாங்க. என்னுடைய திறமையைக் காட்ட சீரிஸ்தான் நல்ல பிளாட்ஃபார்ம். அதுமட்டுமில்லாம, இங்க நிறைய சுதந்திரம் இருக்கு. நான் தெலுங்குப் பொண்ணுதான், இருந்தாலும் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரிதான் எனக்கு நெருக்கமாவும் கம்ஃபர்ட்டாவும் இருக்கு.” என்றும் சொன்ன சுனைனா