

தமிழில் வில்லனான நடிகர் அர்ஜு தாஸ் தற்போது வில்லனலிருந்து ஹீரோ வாக அடிவைக்கிறார். அறிமுக இயக்குநர் வி. விக்னராஜன் இயக்கத்தில், அட்லீ மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது‘அந்தகாரம்’. இந்த படம் அட்லீ தயாரிக்கும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியானது. அன்று முதல் இந்த படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ட்ரைலரும் இணையத்தை கலக்கி வருகின்றது.

சஸ்பன்ஸ் த்ரில்லர் படமான இக்கதையில், ஒரு பார்வை இழந்த மந்திரவாதியாக வினோத் கிஷன், கிரிக்கெட் வீரராக அர்ஜுன் தாஸ் மற்றும் மனநல மருத்துவராக குமார் நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை வஞ்சம், திகைப்பு மற்றும் இருளின் வலையில் பின்னிப் பிணைந்துள்ளது. மேலும், பூஜா ராமகிருஷ்ணன், மீஷா கோஷல், ‘ஜீவா’ ரவி, ‘ரெயில்’ ரவி மற்றும் மஹேந்திரா முல்லத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
கடந்த 14ம் தேதி வெளியான இந்த படத்தின் ட்ரைலர் தற்போது யுடியுப் தளத்தில் ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதே சமயம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது திங்க் மியூசிக் நிறுவனம்.
