

தமிழ் சினிமாவின் கலைக்குடும்பத்தின் முதல் குடும்பம் என்றால் அது எம்.ஆர். ராதா குடும்பம் என்றால் அது மிகையாகது காரணம் தமிழ் சினிமாவின் வழிகாட்டி என்று சொல்லலாம் அவரை தொடர்ந்து எம்.ஆர்.வாசு அடுத்து ராதாரவி, அடுத்து ராதிகா இவரை தொடர்ந்து நிரோஷா இப்படியான மிக திறமை வாய்ந்த நடிகர்கள் கொடுத்த குடும்பம் .
இந்த குடும்பத்தில் வந்த நிரோஷா பொது மக்களுக்கு உதவுவதில் தனி பட்டு வருகிறார்.சென்னையில் சுனாமி வந்தபோதும் சரி கடந்த சில வருடங்களுக்கு முன் வந்த மழை வெள்ளத்தில் பாதிக்க பட்ட போதும் மிக பெரிய அளவில் உதவினார் இது மாதிரி பல சம்பவங்கள் போது ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார்.

தற்போது கொரானாவின் மிக பெரிய ஆபத்தில் மக்கள் மட்டும் இல்லை அரசாங்கமும் பாதித்து வருகிறது இந்த சமயத்திலும் மிக பெரிய அளவில் ஏழை மக்களுக்கு உதவி வருகிறார். நடிகை நிரோஷா அதுவும் சும்மா இல்லை இதுவரை அதாவது இந்த லாக் டவுன் ஆரம்பித்த நாள் முதல் நாள் முதல் பலருக்கு உணவு மளிகை பொருள்கள் உதவி வருகிறார் தினமும் குறைந்தது ஆயிரம் பேருக்கு உணவு அளித்து வருகிறார் அதோடு கிட்டத்தட்ட ஐனூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருள் கொடுத்திருக்கிறார்.

அதோடு கிட்டத்தட்ட பத்தாயிரம் மேற்பட்ட முககவச உறை கை உறை என்று அவர் தம்பி விஜய் உதவியுடன் மக்களுக்கு உதவி வருகிறார் .
இந்த அவரின் உதவி மனபான்மைக்கு அவரின் கணவர் நடிகர் ராம்கி அவருக்கு உதவியாகவும் ஊக்கமும் படுத்தி வருகிறார் .
