
நடிகர் விஜய் தொடர்ந்து பைரவா படபிடிப்பில் இருந்து வந்தார் நேற்று நெல்லையில் படபிடிப்பு முடிந்து வந்தார் நீண்ட நாளுக்கு பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் இன்று காலை அப்போது அவர் பேசிய விவரம்
ஊழல் மற்றும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு திடீரென்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது.
இதனால், நாட்டில் ஏற்பட்டுள்ள பண தட்டுபாடால் மக்களின் இழல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளுக்கு போதிய சில்லரை இல்லாததால், அத்தியாவாசியப் பொருட்கள் கூட வாங்க முடியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் அறிவிப்பை ஆரம்பத்தில் வரவேற்ற சில பிரபலங்கள், “முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்திருக்கலாம்” என்று சொல்ல தொடங்கி விட்டார்கள்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் அறிவிப்பு குறித்து இன்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஜய், ”பிரதமர் மோடி யோட அறிவிப்பு பொருளாதாரத்தை உயர்த்தும் என்பது நிச்சயம்” என்று தெரிவித்தாலும், கூடவே, ”மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் மக்கள் இப்படி கஷ்ட்டப்பட மாட்டார்கள்” என்று தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படி மத்திய அரசு திடீரென்று அறிவித்ததால், பண தட்டுப்பாடு காரணமாக தன்னோட பேத்தி திருமணம் நடக்காததால் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். மருத்துவமனையில் பழைய நோட்டை வாங்க மறுத்ததால் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. பழைய நோட்டை மாற்ற முடியாத சோகத்தில் விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்” என்று மோடியின் அறிவிப்பால் மக்கள் பலியான விஷயத்தை மக்களுக்கு ஞாபகமும் படுத்தியுள்ளார் நடிகர் விஜய்.
