கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ” மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த முதல் இந்திய நடிகர் ஆவார் – விஜய்
மத்திய அரசு எடுத்த இந்த முடிவு நிஜமாகவே நல்ல விஷயம் தான் கண்டிப்பா இது நம்ம நாட்டுக்கு தேவையான துணிச்சலான ஒரு முடிவு தான். கண்டிப்பா இது நம்ம நாட்டோட பொருளாதாரத்தை வளரத்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு நோக்கம் பெரியதாக இருக்கும் போது அதற்கான பாதிப்பு இருக்க தான் செய்யும். அந்த நோக்கத்தை விட பாதிப்பு அதிகமாகி விட கூடாது என்பதை தான் பார்த்து கொள்ள வேண்டும். சில விஷயங்களை தவிர்த்திருக்கலாமோ என்ற சின்ன எண்ணம் தான். சில பொதுமக்கள் சாப்பாடு வாங்கி சாப்பிட முடியாமல், மருந்து மாத்திரை வாங்க முடியாமல் , திரையரங்களில் டிக்கெட் வாங்க முடியாமல் , பயணத்தின் போது ஊர் திரும்ப முடியாமல் இருக்கும் நபர்களை பார்க்கும் போது தேவையில்லாமல் இவர்கள் அனைவரும் பாதிக்க படுகிறார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
நான் தொலைகாட்சி செய்திகளில் சில விஷயங்களை பார்த்தேன் மனதிற்கு அது கஷ்டத்தை அளிக்கும் விதத்தில்...

