Thursday, October 29
Shadow

தந்தை மகள் பாசபோராட்டத்தை சொல்லும் ‘அன்பிற்கினியாள்’ திரைப்படம் மார்ச் 5ம் தேதி ரிலிஸ்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஸ்மோரா’, ‘ஜுங்கா’ போன்ற படங்களை இயக்கிய கோகுல் சக்தி பிலிம் பேக்டரி சார்பில் இயக்கும் படம் ‘அன்பிற்கினியாள்’.

மலையாளத்தில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற ஹெலன் படத்தை தமிழில் ‘அன்பிற்கினியாள்’ என ரீமேக் செய்துள்ளனர்.

பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்து வருவதோடு, தரமான படங்களை வெளியிடும் நிறுவனமான சக்தி பிலிம் பேக்டரி சார்பில் பி.சக்திவேலன் தமிழகம் முழுவதும் இந்த படத்தை வெளியிடுகிறார்.

சுமார் 16 வருடங்களாக நடிக்காமல் இருந்த நடிகர் அருண்பாண்டியன் இப்படத்தில் தந்தையாகவும், அவருடைய மகள் கீர்த்தி பாண்டியன் மகளாகவும் நடித்திருக்கிறார்கள்.

தந்தை மகள் பாச உறவை மையமாக வைத்து தயாராகியுள்ள இந்த படம் யு சான்றிதழ் பெற்றுள்ளது. ‘அன்பிற்கினியாள்’ வரும் மார்ச் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.