Wednesday, October 28
Shadow

கொரோனா முதல்வர் நிதிக்கு 2கோடி நிதி உதவிய லைகா நிறுவனததின் தலைவர் சுபாஸ்கரன்


கொரோனா இன்று உலகையே புரட்டி போட்டு வருகிறது இதனால் உலக வல்லரசு நாடுகளே பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது அதே போலதான் நம் நாடும் மிகவும் மோசமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது.இதற்காக அரசுக்கு உதவும் வகையில் பலர் தாமாக முன் வந்து உதவி வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவின் மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனமும் அரசுக்கு தன் பங்குக்கு உதவியுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (19.6.2021) தலைமைச் செயலகத்தில், லைகா புரோடக்சன்ஸ் திரு.சுபாஸ்கரன் அவர்களின் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் திரு.ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் திரு.ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் திரு.கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். உடன் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உள்ளார்.