
அமைதியான சூழ்நிலையில் வெளியாகும் போதே சிம்பு படம் ஒன்னுமில்லாமல் போகும், தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில் வெளியாகும் ‘அச்சம் என்பது மடமையடா’ என்னவாகப் போகுதோ!, என்று கவலைக்கு எதிர்மறையாக அமைந்திருக்கிறது படத்தின் கலெக்சன் ரிப்போர்ட் இதுவரை இல்லாத மிக பெரிய வசூல் சாதனை என்று சொல்லணும்.
மொத்தத்தில் சிம்புவுக்கும், கெளதம் மேனனுக்கும் இப்படம் வெற்றிப்படமாக அமைந்துவிட, டக்கென்று படக்குழுவினரை அழைத்து ஒரு பார்ட்டியை கொண்டாடினார்கள் சமீபத்தில்.
இதற்கிடையில், இந்த வெற்றி குறித்து பேட்டியளித்த சிம்புவிடம், நயந்தாராவுக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடக்க போகிறதே, உங்களுக்கு எப்போது? என்றதற்கு, நான் படங்களில் நடிப்பதிலையே போட்டி போட மாட்டேன், திருமணத்திலா போட்டி போட போகிறேன்.
நயந்தாராவும், விக்னேஷ் சிவனும் எனது நல்ல நண்பர்கள் தான். அவர்களது திருமணத்திற்கு அழைத்தால், நான் கண்டிப்பாக செல்வேன்” என்று தெரிவித்தார்.
