Wednesday, October 28
Shadow

உலகில் முதல்முறையாக மிக புதுமையான முறையில் வெளியாகும் 2.0!

இயக்குனர் ஷங்கர் என்றாலே புதுமை என்று பெயர் எல்லாமே வித்தியாசம் பிரமாண்டம் இருக்கவேண்டும் என்று இருப்பவர் அதை மிகவும் நேர்த்தியாக செய்து வெற்றியும் பெறுபவர். அது இவர் படங்கள் மட்டும் இல்லை இவரின் படத்தின் விழாகளும் தான் அதே போல் படத்தின் தொழில் நுட்பம்

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் மும்பையில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியானது.

இவ்விழாவில் பேசிய இப்படத்தின் சவுண்ட் டிசைனர் ரசூல் புக்குட்டி, இப்படம் மிகவும் வித்தியாசமான ஒரு ஒலியில் திரையரங்குகளில் வெளியாகும் என கூறியிருந்தார். உலகில் யாருமே இதுவரை இப்படிப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தில் படத்தை ரிலீஸ் செய்தது இல்லையாம்.

Leave a Reply