
கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை கடந்த சில நாட்களாக நல்ல நிலையில் தேறி வந்ததாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் நேற்று முன்தினம் திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவருடைய உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே அவர்களின் ஆலோசனையின்படியே சிகிச்சைகள் நடைபெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை முதல்வரின் உடல்நிலை குறித்த அறிக்கை ஒன்றை சற்று முன் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ‘நேற்று மாலை மாரடைப்பால் முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் முதல்வர் உள்ளார். இருப்பினும் முதல்வரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான வகையில் உள்ளது.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வர் விரைவில் குணமாகி வரவேண்டும் என்று கோடானு கோடி தமிழக மக்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் தன் இரங்கலையும் அஞ்சலியும் செலுத்தியுள்ளார் அதில் அவர் கூறியது
மாண்பிகு டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் மறைவால் வாடும் சக தமிழ் நாட்டு மக்கள்களுக்கும் உலக தமிழர்களுக்கும் அண்ணா திரவிடமுன்னேட்ட்ற கழக தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
பல்வேறு இன்னல்களை கடந்து சாதனை புரிந்து உயர்ந்த தலைவர் அவர் மீண்டும் ஆரோக்கியத்துடன் வரவேண்டும் என்ற பிராத்திக்கும் நேரத்தில் அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
அவர் பிரிவால் வாடும் எனக்கும் எண்ணற்ற சக தமிழ்மக்களுக்கும் இந்த பிரிவை தாங்க வல்லமை தர இறைவனை வேண்டுகிறேன்
இவன்
அஜித்குமார்
