
சிங்கம் 3 படம் வரும் ஜனவரி 26 ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் அதே நாளில் பலரும் தங்களது படத்தை இறக்கி விட்டு சிங்கத்துடன் மல்லுக்கட்ட திட்டம்
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள மொட்டை சிவா கெட்ட சிவா திரைப்படத்தை வேந்தர் மூவிஸ் மதன் மாற்றும் ஆர்.பி.சௌத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர் மதன் தலைமறைவாகி பின் சிறையிலிருப்பதால் படத்தை வெளியிட சில சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ராகவா படப்பிடிப்பு முடிவடைந்தது.
இன்னும் 2 பாடல்கள் மட்டும் ஷூட்டிங் எடுக்கவேண்டியுள்ளது. அது முடிந்ததும் படம் வரும் ஜனவரி 26 ம் தேதி வெளிவரும் என தெரிவித்துள்ளார் மேலும் அதேநாளில் ஜெயம் ரவி நடித்துள்ள போகன் படமும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
