
இளையதளபதி விஜய் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளிவருகிறது பைரவா. இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது. இது விஜய் ரசிகர்களிடம் மிகவும் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது முதல் காட்சியிலே ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளார் இயக்குனர். விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடி முதல் முறை என்றாலும் ட்ரைலர் அருமையாக உள்ளது அப்பா படத்தில் இன்னும் பிரமாதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை எப்பவும் போல விறு விறுப்பான சண்டைகாட்சிகள் அதை விட அனல் பறக்கும் பஞ்ச் வசனங்கள் தெறிக்கும் போல தான் இருக்கு விஜய் படத்தில் முதல் முறையாக கிரிக்கெட் விளையாடி சண்டை போடுகிறார். ட்ரைலரே இப்படி என்றால் அப்பா படம் எப்படி இருக்கும் இன்னும் பதினோரு நாள் தானே
இந்நிலையில் இப்படம் இப்படம் ஒரு பொழுதுபோக்கு படமாக இருந்தாலும் நெஞ்சை உருக்கும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.
எப்படி விஜய்யின் கத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருந்தாலும் அதில் ஒரு சமூக அக்கறை இருந்ததோ அதே போல் தான் இந்த பைரவாவும் இருக்கும் என்கிறார்கள். குறிப்பாக பைரவாவில் விஜய் பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் கைதட்டல்கள் உறுதி என்கிறது படக்குழு.
