
ஒரு படத்துக்கு இயக்குனர் சரியாக அமைந்தால் தான் அந்த படம் மிக பெரிய வெற்றியை கொடுக்கும் அந்த வகையில் அது எந்த ஹீரோவாக இருந்தாலும் . இயக்குனர் ஹீரோ கூட்டணி என்பது மிகமுக்கியம் அப்படி ஒரு சிறந்த கூட்டணி என்றால் அது A.R.முருகதாஸ் விஜய் கூட்டணி என்பது மிக வலுவான கூட்டணி அது மட்டும் இல்லாமல் மாபெரும் வெற்றி கூட்டணி என்று சொல்லலாம். இந்த கூட்டணி மீண்டும் எப்ப இணையும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்து இருகின்றனர்.
இளைய தளபதி விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படங்கள் துப்பாக்கி, கத்தி. இந்த இரண்டு படத்தையும் முருகதாஸ் தான் இயக்கியிருந்தார்.
இவர் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார், இதை தொடர்ந்து அடுத்து இவர் அஜித்துடன் இணைவார் என கூறப்பட்டது.
ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவலின்படி முருகதாஸ்-விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் வாய்ப்பு அமைந்துள்ளது.
இப்படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரே தயாரிக்கவுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.
