
பைரவா ரிலீஸ் நெருங்கிவரும் வேளையில் படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் முதல்முறையாக விஜய் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
எப்பவுமே விஜய் படம் ரிலீஸ்க்கு இரண்டு நாளுக்கு முன் தான் எதாவது பிரச்சனை வரும் இந்த படத்துக்கு எதுவும் இல்லயே என்று பெரும் மூச்சு விடும் நேரத்தில் எங்கு இருந்தோ ஒருத்தன் வந்துட்டான்.
இப்படம் ஜனவரி 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கான முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் இப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுவழக்கு தொடரப்பட்டுள்ளது.
பட ரிலீசுக்கு முன் இதற்கு படத்தரப்பு பதிலளிக்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே பட ரிலீஸில் ஏதேனும் சிக்கல் வருமோ என ரசிகர்கள் தற்போது அச்சத்தில் உள்ளனர்.