Thursday, April 25
Shadow

சூர்யா படபிடிப்பு நடத்தவிடாமல் பொது மக்கள் முற்றுகை

‘S3’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்ட படத்தை போடா போடி, நானும் ரௌடிதான் படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிவருகிறார். கீர்த்தி சுரேஷ்தான் இப்படத்தில் நாயகி.

இதன் படப்பிடிப்பு நேற்று சென்னை கே.கே நகரில் உள்ள பாரதிதாசன் காலனியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் நடைபெற்று வந்தது. சூர்யா படப்பிடிப்பு என்பதால் ரசிகர்களும் அவரை காண பெருமளவில் கூடிவிட்டனர். இதனால் அந்த ஏரியா மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. இதனால் அங்கு இருந்த மக்கள் படபிடிப்பை நிறுத்தி விட்டு உடனே கிளம்பும் மாதிரி சண்டை போட்டனர் பின்னர் சில நேரம் படபிடிப்பு நிறுத்த பட்டது சூர்யா வந்து பொது மாக்களிடம் பேசிய பிறகு அங்கு இருந்த மக்கள் விலகினர் சூர்யா யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் நான் பார்த்து கொள்ளகிறேன் என்ற உத்திரவாதம் கொடுத்த பின் தான் மக்கள் மீண்டும் படபிடிப்பை தொடர அனுமதித்தனர்.

Leave a Reply