
ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் சங்கம் நாளை ஜனவரி 20ம் தேதி மௌன போராட்டம் நடத்துவதாக அறிவுத்துள்ளனர்.
இதில் அனைத்து நடிகர், நடிகைளும் கலந்து கொள்ள அறிவுறுத்துவோம் என துணைத்தலைவர் பொன்வண்ணன் தெரிவித்தார்.
இதில் அஜித்தும் உறுதியாக கலந்து கொள்வார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்களாம்.
நடிகர் சங்கத்துக்கு நடைபெற்ற தேர்தல் வாக்களிப்பதற்கும், பொதுக்குழு உள்ளிட்ட எந்தொரு நிகழ்விலும் அஜித் கலந்து கொள்ளவில்லை
ஆனால் இது இளைஞர்களுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டம் என்பதால் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.
இதற்கு முன்பாக, இலங்கை பிரச்சினையின் போது நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் அஜித் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலறிந்த ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
