Saturday, June 27
Shadow

மாணவர்களை தாக்கிய போலிசார் முதல்வருக்கு கமல் ஹாசன் கேள்வி

இதுவரை பொதுச்சொத்திற்க்கு எச்சேதமுமில்லாமல் நடந்த இப்போராட்டம் அமைதி இழக்கக்கூடாது. இந்தியாவின் மூத்த தலைமை ஆவன செய்ய வேண்டும். செய்யும். வீரத்தின் உச்சகட்டமே அஹிம்ஸை. அறவழிப் போராளிகள் ரத்தக் காயம் படுவது இதுவரை நிகழாததல்ல.

அமைதி காக்கும் கடமை உமது. வெகுளாதிருத்தலே விவேகம். சட்டமன்றத்தில் என்ன கூறப்போகிறார்கள் என்று மாணவர் சமுதாயம் காத்திருந்தபோது அவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவேண்டும்?

மாண்புமிகு தமிழக முதலமைச்சரிடம் பேசினேன். முக்கியமான கேள்வியை அவரிடம் எழுப்பினேன்.

அவர் விரைவில் பதில் அளிப்பார். அவர்கள் உங்களைத் திருப்திப்படுத்த ஆவலாக உள்ளார்கள்.

அமைதியாக இருக்கவும். என்னுடைய தொடர்புகளின் மூலம் பிரதமருக்கும் தகவல் தெரிவித்தேன். எனவே அனைவரும் அமைதி காக்கவேண்டும்

Leave a Reply