Saturday, April 18
Shadow

அட்லி படம் மூலம் 6-வது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல காமெடியன்!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு பிப்ரவரியிலிருந்து தொடங்கவுள்ளது. இதுநாள் வரை வடிவேலு என்று இருந்த நமக்கு அவர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

இப்படத்தில் விஜய்யுடன் காமெடியனாக நடிக்க சத்யன் ஒப்பந்தமாகியுள்ளார். இது விஜய்யுடன் அவர் நடிக்கும் ஆறாவது படமாகும். இதன் பெரும்வாரியான படப்பிடிப்பு அமெரிக்காவில்தான் நடைபெறும் என ஏற்கனவே கூறப்பட்டுவிட்டது. இந்நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் ஒரு மாதம் முழுவதும் அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply