
ஒரு இயக்குனர் பல கனவுகளுடன் தான் முதல் படத்தை இயக்குகிறார்கள் அப்படி இயக்கும் [போது சில படங்கள் மிக பெரிய வெற்றியடைகிறது அப்படி அடைந்துவிட்டால் அந்த இயக்குனருக்கு அடிக்கும் ஜாக் பாட் இருக்கே உடனே உச்ச நடிகரை வைத்து இயக்கும் வாய்ப்பு அந்த படமும் ஹிட் ஆச்சுனா போதும் அவங்களை கைல பிடிக்க முடியாது அப்படி ஜாக் பாட் அடித்த இயக்குனர் தான் அட்லி ஆனால் அவர் கடந்து வந்த பாதையை மறந்துவிட்டார் என்று தான் சொல்லணும். ஏன் என்று தானே பாக்குறிங்க இப்ப அவர் இயக்குனர் மட்டும் இல்லை பட தயாரிப்ப்ளரும் அப்படி அவர் தயாரிக்கும் படத்தில் அவர் செய்யும் கஞ்சத்தனம் பாவம் இளம் இயக்குனர் வாழ்கை கேள்விக்குறியாக உள்ளது.
இரண்டே படங்களில் இரட்டை இலக்க கோடிகள் சம்பளத்துக்கு ஏறிவிட்டார் அந்த இளம் இயக்குநர். ஒரு பக்கம் தளபதியை இயக்குவதோடு இன்னொரு பக்கம் சொந்தமாக பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
தான் இயக்கும் பிற தயாரிப்பாளர்களின் படத்துக்கு தண்ணியாக செலவு செய்யும் இயக்குநர், தான் தயாரிக்கும் படத்துக்கு காசை இறக்க ரொம்பவே கணக்கு பார்க்கிறாராம். இயக்கும் இளம் இயக்குநருக்கும் சம்பளம் தரவில்லையாம்.
இயக்குநர் ரொம்பவே கணக்கு பார்ப்பதால் ஷூட்டிங் அடிக்கடி தடைபட்டு நிற்கிறது. ஹீரோவே டேக் ஓவர் செய்யலாமா என்று யோசிக்கிறாராம்.
தனக்கு ஒரு நியாயம்? மற்றவங்களுக்கு ஒரு நியாயமா பிரதர்?
