Saturday, April 18
Shadow

விவேகம் டைட்டில் ரகசியம் மற்றும் படத்தின் முக்கிய கரு ஒளிந்துருப்பது யாருக்கு தெரியும்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படத்துக்கு விவேகம் என பெயர் வைத்துள்ளனர்.வி செண்டிமெண்டை வைத்து தான் சிவா இந்த டைட்டில் தேர்ந்த்டுத்தார் என்று பரவலாக பேசபடுகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. அதிலிருந்து சமூக வலைத்தளம் முழுவதும் இதைப்பற்றிய பேச்சுதான். இந்த ஃபர்ஸ்ட் லுக் பைரவா சாதனயை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், சிவகார்த்திகேயன், அருண்விஜய், ராகவா லாரன்ஸ், அதர்வா, குஷ்பு பாலிவுட் ஷாருக்கான் என கோலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை பாராட்டிவிட்டார்கள்.
3466908b-7dc3-4f56-946e-db1531cce64f
இந்த போஸ்டரில் விவேகம் எனும் தலைப்பை பார்த்தால் அது டிஜிட்டல் எண்களை போன்ற டிசைனில் எழுதியிருப்பது தெரியும். ஆனால் கொஞ்சம் உற்று கவனித்தால் அது ஒரு மொபைல் எண் என்பது தெரியும். இந்த நம்பர்தான் படத்தின் கதைக்கு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply