Sunday, March 23
Shadow

இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர் மறைந்த தின பதிவு


ஏ. சி. திருலோகச்சந்தர்  தமிழகத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் புகழ்பெற்ற பல தமிழ்த் திரைப்படங்களையும், சில இந்தி, தெலுங்குப் படங்களையும் இயக்கியுள்ளார். 1969 இல் இவர் இயக்கிய தெய்வமகன் திரைப்படம் ஆசுக்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதலாவது தென்னிந்தியத் திரைப்படமாகும்.

வேலூர் மாவட்டம் ஆற்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருலோகச்சந்தர். 1962 இல் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த வீரத்திருமகன் திரைப்படத்தை முதன் முதலில் இயக்கினார்.

திருலோகச்சந்தர் 2016 ஜூன் 15 அன்று தனது 86-ஆவது வயதில் சென்னையில் காலமானார். இவருக்கு மல்லி சீனிவாசன் என்ற மகளும், ராஜ்சந்தர் என்ற மகனும் உள்ளனர். இவரது இறப்பிற்கு சில நாட்களுக்கு முன்னர் இவரது இன்னொரு மகன் பிரேம் திரிலோக் அமெரிக்காவில் காலமானார்.