
“நண்பர்கள் உறவின் நெஞ்சை தொடும் பயணம்” – ‘பிரௌன் மணி’ First Look மூலம் எதிர்பார்ப்பு கிளப்பும் புதிய முயற்சி!
தமிழ் சினிமாவில் புதிய கலைநோக்குடன் உருவாகும் திரைப்படமாக ‘பிரௌன் மணி’ கவனம் ஈர்த்துள்ளது. River Route Studios மற்றும் Red Rock Studios இணைந்து தயாரிக்கும் இந்த முதல் கூட்டுத் தயாரிப்பின் டைட்டிலும் First Look-உமும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், படம் குறித்து ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த First Look-ஐ நடிகர் ரியோ ராஜ் வெளியிட்டது படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளது.
இயக்குநர் கதிரவன் சம்பத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், ராம் நிஷாந்த் மற்றும் JS கவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல்வேறு படங்களில் தங்கள் திறமையை நிரூபித்துள்ள இவர்களின் இணைவு, ‘பிரௌன் மணி’க்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது
.தொழில்நுட்ப ரீதியாகவும் வலுவாக அமைந்துள்ள இந்தப் படத்திற்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை சக்தி சுப்ரமணியன் மேற்கொண்டுள்ள நிலையில், சுந்தர் S எடிட்டிங்கையும், அபர் கலைஇயக்கத்தையும் கவனித்துள்ளனர். மேலும், Sync Sound முறையில் லைவ் சவுண்டுடன் உருவாகும் இந்த படம், Soundaholics குழுவின் ஒலி வடிவமைப்பில் இயல்பான அனுபவத்தை வழங்கும் வகையில் தயாராகிறது.
இந்தத் திரைப்படம் தென்னிந்தியாவின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இயற்கைச் சூழல் மற்றும் கலாச்சாரப் பின்னணிகள் கதைக்கு உணர்ச்சி ஆழத்தை வழங்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணி பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன
குடும்பம் மற்றும் நண்பர்கள் உறவை மையமாகக் கொண்டு உருவாகும் ‘பிரௌன் மணி’, இரண்டு நண்பர்களின் வாழ்க்கைப் பயணத்தை நகைச்சுவை, உணர்ச்சி மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வுகளின் மூலம் சொல்லும் குடும்ப எண்டர்டெய்னராக உருவாகியுள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்களாக ரியோ ராஜ் மற்றும் ரமேஷ் செயல்பட்டுள்ள நிலையில், கவின் GT இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
First Look வெளியாகியுள்ள நிலையில், ‘பிரௌன் மணி’ ஒரு மனதை வருடும், அதே நேரத்தில் மகிழ்ச்சியூட்டும் திரைப்பட அனுபவமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் ஆடியோ வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீட்டு தகவல்கள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

“A Heartfelt Journey of Friendship” – ‘Brown Mani’ First Look Sparks Curiosity and Excitement!
The upcoming Tamil film Brown Mani is already drawing attention for its fresh narrative approach. Produced jointly by River Route Studios and Red Rock Studios, the film marks their first collaboration. The title and First Look have now been unveiled, raising anticipation among audiences. Actor Rio Raj launched the First Look, adding further buzz to the project.
Directed by Kathiravan Sampath, Brown Mani features Ram Nishanth and JS Kavi in lead roles. Both actors, known for their performances in various films, bring added strength and credibility to the project.
On the technical front, the film boasts a strong crew. Music is composed by Dev Prakash Regan, while cinematography is handled by Sakthi Subramanian. Editing is by Sundar S, and art direction is led by Abar. Notably, the film is being made using the Sync Sound technique, capturing live sound throughout the shoot. The Soundaholics team is handling the sound design, promising a realistic and immersive audio experience.
Shot extensively across various locations in South India, the film captures rich natural landscapes and cultural elements that enhance the storytelling. With shooting now completed, the project has moved into full-scale post-production.
Brown Mani is centered around family values and friendship, portraying the emotional and entertaining journey of two friends. Blending humor, emotion, and engaging storytelling, the film is crafted as a wholesome family entertainer aimed at appealing to a wide audience.
The film is produced by Rio Raj and Ramesh, with Kavin GT serving as co-producer.
With the First Look now out, expectations are rising for Brown Mani to deliver a touching yet entertaining cinematic experience. Details regarding the audio launch and theatrical release are expected to be announced soon.
