Thursday, October 15
Shadow

தாயின் அன்பு… எதிர்பாராத முடிவுகள்… மனதை உலுக்கும் உளவியல் த்ரில்லர் ‘ஆஷா’ – அக்டோபர் 16 முதல் ZEE5-ல்!

தாயின் அன்பு… எதிர்பாராத முடிவுகள்… மனதை உலுக்கும் உளவியல் த்ரில்லர் ‘ஆஷா’ – அக்டோபர் 16 முதல் ZEE5-ல்!

உர்வசி நடிப்பில், சஃபர் சனல் இயக்கியுள்ள ‘ஆஷா’ திரைப்படம் தாய்மை, மனிதர்களின் முடிவுகள் மற்றும் அவற்றால் ஏற்படும் எதிர்பாராத விளைவுகளைப் பேசுகிறது.

ஒரு சாதாரண மனிதர் எடுக்கும் சிறிய முடிவு, அவரையும் அவரைச் சுற்றியிருப்பவர்களையும் எந்த அளவுக்குப் பாதிக்கும்? குடும்பத்தைக் காப்பாற்ற நினைக்கும் ஒரு தாய், எதிர்பாராத சூழலில் சிக்கிக்கொண்டால் என்ன நடக்கும்? இத்தகைய கேள்விகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள உளவியல் த்ரில்லர் திரைப்படம் ‘ஆஷா’. மூத்த நடிகை உர்வசி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், அக்டோபர் 16-ம் தேதி முதல் மலையாளம் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் சஃபர் சனல் இயக்கத்தில், விநாயகா அஜித் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விஜயராகவன், லட்சுமி மேனன், பாக்யலட்சுமி, அஜயன் அடாட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டின் மூலம் அதிகமான ரசிகர்களைச் சென்றடையத் தயாராகியுள்ளது. மலையாளம் மட்டுமின்றி, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகள் வெளியாகவுள்ளன.

கணவரை இழந்து தனது மகள்களுடன் வாழும் ஆஷா, குடும்பத்தின் பாதுகாப்பையே தனது வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறார். அவரது வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சாலை விபத்து ஒன்று, ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ள ஜீமோன் கதாபாத்திரத்துடனான மோதலுக்கு வழிவகுக்கிறது. அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சாதாரணப் பிரச்சினையாகத் தொடங்கும் இந்தச் சம்பவம், நாளடைவில் பலரது வாழ்க்கையையும் புரட்டிப்போடும் நிகழ்வுகளின் தொடராக மாறுகிறது.

தனது அன்புக்குரியவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம், கோபம், அச்சம், பெருமை எனப் பல்வேறு உணர்வுகளுக்கு இடையில் ஆஷா எடுக்கும் முடிவுகள் கதையின் போக்கை மாற்றுகின்றன. ஒரு சூழ்நிலையில் எது சரி, எது தவறு என்பதை உடனடியாகத் தீர்மானிக்க முடியுமா என்ற கேள்வியையும் படம் எழுப்புகிறது.

பழிவாங்கும் கதைகளில் வழக்கமாக இடம்பெறும் நாயகன், வில்லன் என்ற எளிய பிரிவுகளுக்கு அப்பால், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணியையும் அதன் முடிவுகளுக்கான காரணங்களையும் ஆராய்வதே இப்படத்தின் தனிச்சிறப்பு. ‘பட்டாம்பூச்சி விளைவு’ எனப்படும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, சிறியதாகத் தோன்றும் ஒரு நிகழ்வுகூட எதிர்பாராத அளவுக்குப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதைப் படம் எடுத்துரைக்கிறது.

ஒரு சாதாரணத் தாய் அசாதாரணமான சூழ்நிலைக்குத் தள்ளப்படும்போது உருவாகும் மனநிலையையும் அதன் விளைவுகளையும் மையமாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளதாக இயக்குநர் சஃபர் சனல் தெரிவித்துள்ளார். வழக்கமான பழிவாங்கும் கதைகளின் பாணியைத் தவிர்த்து, கதாபாத்திரங்களின் உளவியல் மற்றும் உணர்வுப் போராட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ZEE5 நிறுவனத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் பிரிவுகளின் வணிகத் தலைவர் லாயிட் சி. சேவியர் கூறுகையில், “வெற்றிகரமான திரைப்படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், அவர்களின் பார்வைக்குச் சவால் விடுக்கும் வித்தியாசமான கதைகளையும் ஆதரிப்பதில் ZEE5 தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. அந்த வகையில், ‘ஆஷா’ திரைப்படம் எங்களது நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது.

பார்வையாளர்களுக்கு எது சரி, எது தவறு என்று அறிவுறுத்தாமல், கதாபாத்திரங்கள் மீதான அவர்களது சொந்தக் கருத்துகளையும் முன்முடிவுகளையும் மறுபரிசீலனை செய்யத் தூண்டும் படமாக இது அமைந்துள்ளது. இயக்குநர் சஃபர் சனல் உணர்வுப்பூர்வமான, ஆழமான கதையுலகை உருவாக்கியுள்ளார். உர்வசியின் இயல்பான மற்றும் வலிமையான நடிப்பு, ஆஷா கதாபாத்திரத்துக்கு கூடுதல் ஆழத்தை அளித்துள்ளது. இத்தகைய தனித்துவமான மலையாளத் திரைப்படத்தை இந்தியா முழுவதும் உள்ள ZEE5 ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

தாய்மை, அன்பு, அச்சம், அறம், மனிதர்களின் முடிவுகள் எனப் பல்வேறு அம்சங்களை உளவியல் த்ரில்லர் பின்னணியில் பேசும் ‘ஆஷா’, பார்வையாளர்களைச் சிந்திக்க வைக்கும் படைப்பாக உருவாகியுள்ளது. தான் நேசிப்பவர்களைக் காப்பாற்ற ஒரு தாய் எந்த எல்லை வரை செல்ல முடியும் என்ற கேள்விக்கான விடையைத் தெரிந்துகொள்ள, ‘ஆஷா’ திரைப்படத்தை அக்டோபர் 16 முதல் மலையாளம் ZEE5 தளத்தில் காணலாம்.

ZEE5 பற்றி:

ZEE5, Zee Entertainment Enterprises Ltd. நிறுவனத்தின் டிஜிட்டல் பொழுதுபோக்குத் தளமாகும். 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் பார்வையாளர்களைச் சென்றடையும் இத்தளம், இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்கள், இணையத் தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நேரலை விளையாட்டுகள், செய்திகள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குகிறது. இந்திய மற்றும் சர்வதேசப் படைப்புகளுடன், பல்வேறு மொழி ரசிகர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப உள்ளடக்கங்களையும் வழங்கி வருகிறது.

A Mother’s Love, Unexpected Choices and Unforeseen Consequences: Urvashi’s Psychological Thriller ‘Asha’ Premieres on ZEE5 on October 16

Directed by debutant Safar Sanal, the acclaimed thriller explores motherhood, morality and how seemingly small decisions can lead to life-changing consequences.

How far can a mother go to protect her children? Can a seemingly ordinary incident change the lives of everyone involved? Exploring these compelling questions, Asha, a psychological thriller starring veteran actress Urvashi in a powerful lead role, is set to premiere on Malayalam ZEE5 on October 16, 2026.

Directed by debutant Safar Sanal and produced by Vinayaka Ajith, the film also features Joju George, Aishwarya Lekshmi, Vijayaraghavan, Lakshmi Menon, Bhagyalakshmi and Ajayan Adat in pivotal roles. Following its theatrical release on September 11, 2026, Asha is now gearing up for its digital premiere, bringing its gripping narrative to a wider audience. The film will also reach viewers through dubbed versions in Hindi, Tamil, Telugu and Kannada.

At the heart of Asha is Asha, a widowed mother whose life revolves around protecting her daughters. An unexpected road accident brings her into conflict with Jeemon, played by Joju George, setting off a chain of events that gradually transforms the lives of everyone involved. What begins as an ordinary confrontation soon develops into a complex situation in which every decision carries unexpected consequences.

As Asha struggles to protect her loved ones, she finds herself caught between fear, anger, pride and the instinct to safeguard her family. The film examines how these conflicting emotions influence human behaviour and raises a compelling question: can an action truly be judged as right or wrong without understanding the circumstances behind it?

What sets Asha apart is its refusal to follow the conventional approach of dividing characters into clear-cut heroes and villains. Instead, the narrative explores the motivations and circumstances behind each character’s actions, encouraging viewers to reconsider their assumptions and judgements.

Inspired by the concept of the Butterfly Effect, the film highlights how seemingly insignificant decisions can trigger consequences far beyond what anyone could have anticipated. Director Safar Sanal has explained that the story emerged from the idea of an ordinary mother being pushed into extraordinary circumstances. He has also noted that the film deliberately moves away from the familiar conventions of revenge-driven narratives, focusing instead on the psychological and emotional struggles of its characters.

Speaking about the film, Lloyd C. Xavier, Business Head – Tamil, Telugu and Malayalam at ZEE5, said, “At Malayalam ZEE5, our vision extends beyond bringing conventionally successful films to audiences. As a leading platform, we are committed to supporting stories that challenge perspectives and celebrate unconventional storytelling.

“Asha reflects this philosophy beautifully. Rather than telling audiences what to think, the film encourages them to question their own assumptions and perceptions of its characters. Safar Sanal has created an engaging world in which every decision carries consequences and the boundaries between right and wrong continue to blur. Veteran actress Urvashi brings extraordinary depth to the character of Asha, portraying her vulnerabilities, strengths and contradictions with remarkable naturalness. We are delighted to bring this emotionally compelling and psychologically intense Malayalam film to ZEE5 audiences across India.”

Blending motherhood, morality, emotional conflict and psychological suspense, Asha promises a thought-provoking viewing experience that stays with audiences beyond its final moments.

Discover how far a mother can go to protect the people she loves. Asha premieres on Malayalam ZEE5 on October 16, 2026.

About ZEE5

ZEE5 is a digital entertainment platform owned by Zee Entertainment Enterprises Ltd. and a global destination for South Asian content, reaching audiences in more than 190 countries. The platform focuses on language-first experiences, locally relevant content, language-specific subscription plans and personalised recommendations.

ZEE5 offers content in seven languages, including Hindi, Tamil, Telugu, Bengali, Malayalam, Kannada and Marathi. Its extensive library features original productions, Indian and international films, television shows, live sports, children’s programming, news, live television and short-format series.

Through its diverse multilingual entertainment offerings, ZEE5 caters to audiences across the world. The platform also brings major football tournaments to viewers in India through Zee Entertainment’s long-term partnership with FIFA, which extends until 2034 and includes the FIFA World Cups in 2026 and 2030.