
மர்மமான காணாமல் போதல்… அதைத் தொடர்ந்து விரியும் ரகசியங்கள்! – ZEE5-ன் புதிய தமிழ் ஒரிஜினல் தொடர் ‘Octopus’
சென்னை:
ஒரு இளம் பெண் திடீரென காணாமல் போகிறார். அவரைத் தேடும் முயற்சியில் அக்கம்பக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைகிறார்கள். ஆனால், அந்தத் தேடல் அவர்கள் எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய மர்ம உலகத்திற்குள் அவர்களை அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு முடிச்சும் அவிழும்போது புதிய கேள்விகள் எழ… மறைந்திருந்த உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிப்படும் வகையில் உருவாகியுள்ளது ZEE5-ன் புதிய தமிழ் ஒரிஜினல் தொடரான ‘Octopus’.
மர்மம், பரபரப்பு, மனித உறவுகள் மற்றும் உணர்வுகளைக் கலந்து உருவாகியுள்ள இந்த 7 எபிசோடுகள் கொண்ட Suspense Thriller தொடரை ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கியுள்ளார். அஷ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன், கலைவாணி பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வழக்கமான விசாரணைக் கதைகளிலிருந்து விலகி, ஒரு பெண்ணை மையமாக வைத்து கதை சொல்லும் விதத்தில் ‘Octopus’ உருவாகியுள்ளது. ஒரு காணாமல் போதல் சம்பவம், ஒரு அக்கம்பக்கத்தின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம், அதனைத் தொடர்ந்து வெளிவரும் மனிதர்களின் ரகசியங்கள் என கதை பல அடுக்குகளுடன் பயணிக்கிறது.
கதையின் முக்கியமான சிறப்பு, மர்மத்தை மட்டுமே நம்பி நகராமல், மனிதர்களுக்கு இடையேயான நம்பிக்கை, உறவுகள், மன உறுதி மற்றும் இக்கட்டான சூழலில் ஒருவர் மற்றொருவருக்காக நிற்கும் தன்மை ஆகியவற்றையும் பேசுகிறது. இதனால், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணியும் கதையின் அடுத்தடுத்த திருப்பங்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
Tamil ZEE5 சமூக வலைதளங்களில் வெளியான ‘Octopus’ Launch Promo ஏற்கனவே பார்வையாளர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, கதையின் பின்னணியில் என்ன நடந்திருக்கலாம் என்பது குறித்த ரசிகர்களின் யூகங்களும் விவாதங்களும் சமூக வலைதளங்களில் உருவாகியுள்ளன.
இத்தொடரின் உருவாக்கம் குறித்து இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி கூறும்போது, COVID ஊரடங்கு காலத்தில் ‘Octopus’ கதைக்கான விதை உருவானதாக தெரிவித்துள்ளார்.
கட்டுப்படுத்தப்பட்ட அக்கம்பக்கச் சூழலில் வாழ்ந்த அந்தக் காலகட்டம், மனிதர்களை நாம் பார்க்கும் விதத்துக்கும் அவர்கள் உண்மையில் இருப்பதற்கும் இடையேயான வேறுபாட்டை சிந்திக்க வைத்ததாகவும், அதையே பல அடுக்குகளைக் கொண்ட மர்மக் கதையாக உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பெண்ணின் காணாமல் போதலை மையமாக வைத்து தொடங்கும் கதை, பின்னர் எதிர்பாராத பல திசைகளில் விரிவடைவதால் தொடருக்கு ‘Octopus’ என்ற தலைப்பு பொருத்தமாக அமைந்துள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ZEE5-ன் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் பிரிவுகளின் Business Head Lloyd C. Xavier, ‘Octopus’ வழக்கமான Crime Mystery மற்றும் Investigative Thriller கதைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையை வழங்கும் என தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணைச் சுற்றி தொடங்கும் மர்மம், ஒட்டுமொத்த சமூகத்தையும் எவ்வாறு ஒன்றிணைக்கிறது என்பதே தொடரின் முக்கிய அம்சங்களில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடரில் கதாநாயகியாக நடித்துள்ள அர்ச்சனா, தனது கதாபாத்திரம் ஒரு மர்மத்தில் சிக்கிக்கொள்வதுடன் நின்றுவிடாமல், அந்தப் பெண்ணின் பயணம் ஒரு முழு அக்கம்பக்கத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் அமைந்திருப்பது தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை, உறவுகள், உள்ளுணர்வு மற்றும் உண்மையை கண்டறியும் உறுதி ஆகியவற்றை இந்தத் தொடர் பேசுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் அஷ்வின், ‘Octopus’ தொடரின் வலுவான எழுத்தும், ஒரு தம்பதியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தொடங்கும் கதை பின்னர் முழு அக்கம்பக்கத்தின் இயக்கவியலாக விரிவடையும் விதமும் தன்னை கவர்ந்ததாக தெரிவித்துள்ளார். மனிதர்களின் நடத்தை, உறவுகள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களை இந்தத் தொடர் ஆராய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Cinemum நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான Adithya J Raju மற்றும் Lisha P Chandran, புதிய குரல்களையும் திறமைகளையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் ‘Octopus’ உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இயக்குநரின் திரைக்கதை, நடிகர்களின் பங்களிப்பு மற்றும் தொழில்நுட்பக் குழுவின் உழைப்பு ஆகியவை தொடரின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மர்மமான ஒரு காணாமல் போதல் சம்பவத்திலிருந்து தொடங்கி, எதிர்பாராத திருப்பங்களுடன் மனிதர்களின் மறுபக்கத்தையும் வெளிப்படுத்தும் ‘Octopus’, ZEE5 தளத்தில் வெளியாகத் தயாராகி வருகிறது. தொடரின் ஒவ்வொரு அத்தியாயமும் அடுத்த முடிச்சை அவிழ்க்கும் வகையில் அமைந்திருப்பதால், இறுதி வரை பார்வையாளர்களை யூகிக்க வைக்கும் அனுபவமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
A Mysterious Disappearance, Hidden Secrets and Unexpected Twists – ZEE5 Unveils Tamil Original Series ‘Octopus’
Chennai:
A young woman suddenly goes missing. As people from her neighbourhood come together to find her, their search soon takes them into a world of mystery and hidden secrets. With every revelation raising new questions, ZEE5 is set to bring viewers ‘Octopus’, a gripping 7-episode Tamil Original suspense thriller.
Directed by Jaichandran Hashmi, the series features Ashwin, Archana, Vinoth Kishan, Sidhu Kumarasan and Kalaivani Bhaskar in key roles. Moving beyond the conventional investigative thriller format, Octopus places a strong female character at the centre of its narrative while exploring mystery, emotions and human relationships.
The story begins with the mysterious disappearance of a young woman and gradually expands into the lives of the people around her. As the search continues, several unexpected truths emerge, revealing different layers of the characters and their relationships.
What sets Octopus apart is that the series does not rely solely on suspense. It also explores themes such as trust, relationships, resilience and the strength of people coming together during difficult circumstances. The mystery surrounding the disappearance becomes a catalyst that brings an entire neighbourhood together while uncovering secrets that had remained hidden.
The ‘Octopus’ Launch Promo, released across Tamil ZEE5’s social media platforms, has already generated considerable interest among viewers. The intriguing premise has also sparked online discussions, with audiences coming up with their own theories and predictions about the mystery at the heart of the series.
Speaking about the series, director Jaichandran Hashmi revealed that the idea for Octopus originated during the COVID lockdown. The experience of living within a restricted neighbourhood environment during that period made him reflect on the difference between how people appear and who they actually are.
According to the director, this thought became the foundation for a larger story exploring the hidden layers within people, relationships and society. The decision to place a woman and a mystery at the centre of the narrative added further depth to the themes he wanted to explore. The story begins with a mysterious disappearance before expanding into unexpected directions, much like the many arms of an octopus.
Lloyd C. Xavier, Business Head – Tamil, Telugu & Malayalam, ZEE5, said that the response to the launch promo has been encouraging. He added that Tamil audiences have consistently embraced crime mysteries and investigative thrillers, and Octopus aims to present the genre from a fresh perspective.
He further noted that the series explores how an entire community comes together during a crisis, while keeping a woman at the heart of the narrative. With strong writing, emotional storytelling and a talented ensemble cast, Octopus is expected to offer viewers an engaging and layered viewing experience.
Actress Archana, who plays a central character in the series, said that what attracted her most to Octopus was the emotional world existing within its suspenseful storyline. Her character is not merely caught up in a mystery; her journey becomes a connecting thread that brings an entire neighbourhood together while gradually revealing several hidden truths.
Archana added that the series explores trust, relationships, intuition and the determination to find answers, while keeping audiences guessing throughout. She described playing the protagonist in a story with multiple emotional layers as a fulfilling experience.
Actor Ashwin expressed his excitement about being part of Octopus. He said the series appealed to him because of its strong writing and the way the narrative expands from the world of a couple to the larger dynamics of an entire neighbourhood.
He also highlighted the series’ exploration of human behaviour, relationships and different aspects of society, adding that the combination of strong writing, visual storytelling and execution makes Octopus a distinctive viewing experience.
The producers from Cinemum, Adithya J Raju and Lisha P Chandran, said that the series reflects their belief in encouraging new voices and emerging talent. They credited the director’s emotionally engaging screenplay, the performances of the cast and the efforts of the entire technical team for bringing the project to life.
Beginning with a mysterious disappearance and gradually unfolding into a story filled with unexpected revelations, ‘Octopus’ promises to combine suspense with an emotional exploration of human relationships. With each episode designed to reveal another layer of the mystery, the series is set to keep viewers engaged until the very end.
Launch promo
