Friday, November 13
Shadow

“என் பெயர் இடம்பெறும் ஒவ்வொரு படத்திலும் 100 சதவீத உழைப்பைத் தருவேன்” – ‘அன்பில் அவன்’ விழாவில் நடிகர் அசோக் செல்வன் உறுதி

“என் பெயர் இடம்பெறும் ஒவ்வொரு படத்திலும் 100 சதவீத உழைப்பைத் தருவேன்” – ‘அன்பில் அவன்’ விழாவில் நடிகர் அசோக் செல்வன் உறுதி

சென்னை:
நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அசோக் செல்வன், தனது திரைப்பயணத்தில் ‘அன்பில் அவன்’ ஒரு புதிய தொடக்கமாக அமைந்துள்ளதாகவும், இனி தனது பெயர் இடம்பெறும் ஒவ்வொரு திரைப்படத்திலும் 100 சதவீத உழைப்பை வழங்குவதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அசோக் செல்வன் கூறியதாவது:

“நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறேன். தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும், திரையில் தொடர்ந்து தோன்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. நான் நடிக்கும் திரைப்படம் பார்வையாளர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில், ‘அன்பில் அவன்’ எனக்கு மிகவும் சரியான படமாக அமைந்துள்ளது.

இந்தப் படத்தில் நல்ல கதை, திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள், சிறந்த நடிகர்கள் என அனைத்தையும் கவனமாகத் தேர்வு செய்து உருவாக்கியிருக்கிறோம். இன்று இந்த நிகழ்ச்சியில் பலரும் என்னைப் பற்றி பேசியபோதுதான், நான் இதுவரை செய்த பணிகளை இவ்வளவு பேர் கவனித்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். நம்முடைய உழைப்பை மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.

ஒவ்வொரு படத்திலும் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. பார்வையாளர்களிடம் இரண்டு அல்லது இரண்டரை மணி நேரத்தை கேட்கும்போது, அதற்குப் பதிலாக அவர்களுக்கு ஒரு முழுமையான அனுபவத்தை வழங்க வேண்டும். இனிமேல் என் பெயர் ஒரு திரைப்படத்தின் போஸ்டரில் இடம்பெற்றால், அந்தப் படத்திற்காக 100 சதவீத உழைப்பை கொடுத்திருக்கிறேன் என்பதே என்னுடைய வாக்குறுதி.

ஒரு திரைப்படம் வெற்றி பெறுகிறதா, இல்லையா என்பது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. ஆனால் என்னுடைய முயற்சியில் எந்தக் குறையும் இருக்காது. அந்த வகையில் ‘அன்பில் அவன்’ எனக்கு ஒரு புதிய தொடக்கம். இதை ‘Reinvention’ அல்லது ‘Rediscovering’ என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். எனக்கு மிகவும் சிறப்பான திரைப்படம் இது.

இந்தப் படத்தின் உருவாக்கப் பயணத்தில் பல ஆண்டுகளாக வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்துள்ளன. அந்தக் கடினமான காலங்களிலும் எனக்கு உறுதுணையாக இருந்த என் அக்கா, அண்ணன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு நன்றி. குறிப்பாக என் அப்பா, அம்மாவுக்கு மிகப்பெரிய நன்றி. ஒரு கட்டத்தில் படத்தின் செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரித்தபோது, என்னுடைய கனவுக்காக அவர்கள் செய்த உதவியை ஒருபோதும் மறக்க முடியாது. என் கனவுக்கு எல்லா வகையிலும் துணை நின்றவர்கள் அவர்கள்.

இயக்குநர் கார்த்திக்குடன் கடந்த பத்து ஆண்டுகளாகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். சில திரைப்படங்கள் தொடங்கியும், சில திரைப்படங்கள் தொடங்குவதற்கு முன்பாகவும் நின்றுவிட்டன. ஆனால் அவரது படைப்பாற்றல் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இருந்தது. திறமையான படைப்பாளிகள் தங்களுக்கான வாய்ப்புக்காக போராடுவதைப் பார்க்கும்போது, அவர்களுக்கு ஒரு மேடையை அமைத்துத் தர வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். ‘அன்பில் அவன்’ மூலம் கார்த்திக்கின் படைப்பாற்றலுக்கு சரியான தளம் கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி.

விக்னேஷ் ஷர்தா மற்றும் அஸ்வின் இருவரும் தங்களுடைய திறமையின் மூலம் பெரிய வாய்ப்புகளைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் பயணம் இன்னும் சிறப்பாக அமைய வேண்டும். திறமைக்கு சரியான வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் எவ்வளவு உயரத்திற்கும் செல்ல முடியும்.

இந்தப் படத்திற்காக ப்ரீத்தி முகுந்தனின் பெயரை முதலில் பரிசீலிக்கலாம் என்று சொன்னது நான்தான். அப்போது அவருடைய பெரிய படங்கள் வெளியாகவில்லை. ஆனால் அவரிடம் ஒரு நட்சத்திரத்துக்கான திறமை இருப்பதாக அப்போதே நம்பினேன். இன்று அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியிருப்பதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ப்ரீத்தியை இந்தப் படத்தில் தேர்வு செய்ததை நான் ‘பிட்காயினில் முதலீடு செய்தது’ போல் நினைக்கிறேன். அவர் மீது வைத்த நம்பிக்கை இன்று பலனளித்திருக்கிறது. அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.

இந்தப் படத்திற்காக கவிதா மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த பங்களிப்புக்கும் நன்றி. சாபு செட்டா படப்பிடிப்புத் தளத்தில் அனைவரையும் குடும்பத்தினரைப் போல கவனித்துக்கொண்டார். யூனிட் சோர்வாக இருக்கும் நேரங்களிலும் தனது கேரவனிலிருந்து வெளியே வந்து சிறிய ஸ்டால் அமைத்து, பிரெட், சீஸ், சாண்ட்விச் உள்ளிட்டவற்றைத் தயாரித்து அனைவருக்கும் வழங்குவார். ஒரு படப்பிடிப்புத் தளத்தில் இப்படிப்பட்ட அன்பையும் அக்கறையையும் நான் இதுவரை பார்த்ததில்லை.

எனது சினிமா பயணத்தில் ஏராளமான ஆடிஷன்களில் கலந்து கொண்டிருக்கிறேன். அதனால் இந்தப் படத்தில் ஏற்கனவே பிரபலமான நடிகர்களை மட்டுமே தேர்வு செய்யாமல், ஆடிஷன் மூலம் திறமையானவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். மஹா, ஆகாஷ் உள்ளிட்ட பலரும் ஆடிஷன் மூலமே தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இந்தப் படத்திற்குப் பிறகு சிறப்பான எதிர்காலம் இருக்கும்.

மஹாவுடன் ஏற்கனவே ஒரு படத்தில் பணியாற்ற முயற்சி செய்திருந்தோம். சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. ஆனால் அப்போதே அவருடைய திறமையை கவனித்தேன். அவர் ஒரு சிறந்த நடிகர். நடிகர் டெல்லி கணேஷின் மகன் என்பதால் நடிப்புக்கான திறமை அவரிடம் இயல்பாகவே இருக்கலாம். அதே நேரத்தில், தனக்கென ஒரு நவீன நடிப்பு பாணியையும் அவர் கொண்டிருக்கிறார்.

ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிகளில் பொதுவாக ஒரு படம் பிளாக்பஸ்டர் ஆகும், மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறுவார்கள். நான் அப்படிச் சொல்ல விரும்பவில்லை. ரசிகர்கள் இந்தப் படத்தை திரையரங்கிற்கு வந்து பாருங்கள். படம் பிடித்திருந்தால், மற்றவர்களிடமும் சொல்லுங்கள்.

இந்தப் படத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. முதலில் டிரெய்லரைப் பாருங்கள். பிடித்திருந்தால் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பாருங்கள். இது உலகின் மிகச்சிறந்த படம் என்று நான் சொல்லவில்லை. இது ஒரு முழுமையான மெயின்ஸ்ட்ரீம் கமர்ஷியல் திரைப்படம். ஆனால் நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும். படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் ரசிகர்களுக்கு அழகான, மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எங்களை தொடர்ந்து ஆதரித்து வரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களைப் பற்றி எழுதி, ஆதரவு அளித்ததால்தான் இன்று நாங்கள் இங்கு நிற்கிறோம். ‘அன்பில் அவன்’ படத்தையும் நீங்கள் விரும்பி, படத்தைப் பற்றிய நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.

“I Will Give 100% of My Effort to Every Film That Carries My Name” – Ashok Selvan at ‘Anbil avan’ Event

Chennai: Actor Ashok Selvan, who plays the lead in the upcoming film Anbil  avan, spoke emotionally at the film’s event in Chennai, calling the project a new beginning in his career. He also promised that every film carrying his name would receive his complete commitment and 100 per cent effort.

Speaking at the event, Ashok Selvan said:

“It has been a long gap since I played the lead in a film. I have never wanted to simply keep acting in films or continuously appear on screen. I wanted every film I do to leave an impact on the audience. In that sense, Anbil avan  has turned out to be the right film for me.

“We have carefully put together this film with a good story, talented technicians and a wonderful cast. Listening to everyone speak about me at this event made me realise how many people have been noticing the work I have been doing. It is a wonderful feeling to know that our efforts are being noticed by others.

“I have always wanted to do something different with every film. When we ask the audience to spend two or two-and-a-half hours with us, we should give them a complete experience in return. From now on, whenever my name appears on a film poster, my promise is that I would have given 100 per cent of my effort to that film.

“Whether a film succeeds or not depends on several factors. But there will never be any compromise in my effort. In that sense, Anbil  avan is a new beginning for me. You can call it a reinvention or rediscovering myself. It is a very special film for me.

“I would like to thank my family members, including my sister and brother, who stood by me during the difficult periods of the film’s journey. A special thanks to my father and mother. At one point, when the production expenses increased beyond what we had initially planned, they supported me for the sake of my dream. I can never forget that. They have stood by my dream in every possible way.

“I have been trying to work with director Karthik for the past ten years. Some projects were started, while others stopped even before they could begin. But I have always had faith in his creativity. Whenever I see talented filmmakers struggling to find the right opportunity, I feel that they deserve a platform. I am happy that Anbil avan has given Karthik the right platform to showcase his creativity.

“It is also very happy to see Vignesh Sharda and Ashwin getting bigger opportunities through their talent. I hope their journeys continue to grow. When genuine talent gets the right opportunity, there is no limit to how far they can go.

“Regarding Preethi Mukhundhan, I was the one who initially suggested that we consider her for this film. At that time, her major films had not yet released. But even then, I believed she had the potential to become a star. Today, seeing her develop her own fan following makes me very happy.

“I consider choosing Preethi for this film like investing in Bitcoin. The faith we placed in her has paid off today. It was a great experience working with her, and I believe she has a wonderful future ahead.

“I would also like to thank Kavitha and her family for their contribution to this film. Sabu Chetta took care of everyone on the sets like family. Even when the unit was tired, he would come out of his caravan, set up a small stall and prepare bread, cheese, sandwiches and other food for everyone. I have never seen such love and care on a film set before.

“I have attended countless auditions throughout my journey in cinema. So, for this film, we decided not to simply cast established actors but to discover talented performers through auditions. Maha, Akash and several others were selected through auditions. I believe they have a bright future after this film.

“We had earlier tried to work with Maha on another film, but that project was eventually dropped for various reasons. However, I noticed his talent even then. He is a very good actor. Being the son of actor Delhi Ganesh, he may have naturally inherited his talent for acting. At the same time, he has developed a modern style of his own.

“At pre-release events, people usually say that a film will become a blockbuster or a huge success. I don’t want to make such claims. I simply request audiences to come to theatres and watch the film. If you like it, please tell others about it.

“We have complete faith in this film. Watch the trailer first, and if you like it, come to theatres and watch the film. I am not saying that this is the greatest film in the world. It is a complete mainstream commercial entertainer, and I am confident that it will entertain you. I believe certain scenes in the film will give audiences a beautiful and memorable experience.

“Finally, I would like to thank all my friends in the press and media who have continuously supported us. We are here today because you have continued to write about us and support our work. I hope you will also like Anbil avan and help take the positive aspects of the film to audiences,” he said.