Thursday, June 18
Shadow

“ஆன்மீகமும் ஆக்ஷனும் இணையும் புதிய முயற்சி!” — ‘தத் த்வம் அஸி’ படப்பிடிப்பு உற்சாக தொடக்கம்

“ஆன்மீகமும் ஆக்ஷனும் இணையும் புதிய முயற்சி!” — ‘தத் த்வம் அஸி’ படப்பிடிப்பு உற்சாக தொடக்கம்

தமிழ் சினிமாவில் ஆன்மீக கதைகளை மையமாகக் கொண்டு உருவாகும் படங்கள் சமீப காலங்களில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அதே வரிசையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய திரைப்படம் “தத் த்வம் அஸி”. பக்தி, நம்பிக்கை, ஆக்ஷன் மற்றும் குடும்ப உணர்வுகளை ஒன்றாக இணைத்து உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று (மே 26) சிறப்பாக துவங்கியது.

தந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே ஆர்வத்தை கிளப்பியது. குறிப்பாக, முன் தயாரிப்பு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கி, மிக குறுகிய காலத்திலேயே முழுமையான திட்டமிடலுடன் படப்பிடிப்புக்கு வந்திருப்பது படக்குழுவின் தெளிவான பார்வையையும் தீவிர உழைப்பையும் வெளிப்படுத்துகிறது.

படப்பிடிப்பு துவக்க விழாவில் இயக்குநர் வெங்கட் பிரபு கிளாப் அடித்து வாழ்த்த, இயக்குநர் பொன்ராம் கேமராவை ஆன் செய்து படக்குழுவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார். எளிமையான ஆன்மீக சூழலில் நடைபெற்ற இந்த நிகழ்வு, படத்தின் கருவை பிரதிபலிப்பதாக இருந்தது.

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற “மாளிகப்புரம்” படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இந்த படத்தை இயக்குகிறார். ஆன்மீக கதைகளை உணர்ச்சிபூர்வமாகவும் காட்சியளவில் வலிமையாகவும் சொல்லும் திறமை கொண்ட அவர், இந்த படத்திலும் அதே தனித்துவத்தை கொண்டு வருவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

நடிகர் வைபவ் இந்த படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக இணைந்துள்ளார். மேலும் அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.

இசையமைப்பாளராக பிரேம் ஜி அமரன் இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் கவனத்தை பெற்றுத் தந்துள்ளது. ஒளிப்பதிவை யுவன் செல்வா மேற்கொள்ள, படத்தொகுப்பை பிரவீன் KL கவனிக்கிறார். கலை இயக்குநராக சூர்யா ராஜிவன் பணியாற்றுகிறார். சண்டைக் காட்சிகளை சக்தி சரவணன் வடிவமைக்கிறார்.

இந்த திரைப்படத்தின் முக்கிய அம்சமாக ஆன்மீக பின்னணியில் மாஸ் மற்றும் ஆக்ஷன் அம்சங்களும் இணைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. குடும்ப ரசிகர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒருசேர பிடிக்கும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தற்போது உருவாக்கி வரும் “ஆர்ய கேரள வர்மன்” திரைப்படமும் வரலாறு மற்றும் ஆன்மீக பின்னணியில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், வித்தியாசமான ஆன்மீக சினிமா உலகை உருவாக்கும் முயற்சியில் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஐயப்ப மண்டல காலத்தை முன்னிட்டு “தத் த்வம் அஸி” திரைப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்மீக உணர்வுகளோடு விறுவிறுப்பான திரைக்கதையும் இணையும் இந்த படம், ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

“A New Blend of Spirituality and Action!” — ‘Tat Tvam Asi’ Shoot Begins on a Grand Note

At a time when spiritually rooted films are receiving strong appreciation from audiences, the upcoming movie “Tat Tvam Asi” has already created significant buzz among cinema lovers. Blending devotion, faith, action, and emotional family elements, the film officially commenced shooting yesterday (May 26) with a grand launch ceremony.

Produced by Tantra Films, the project has generated excitement ever since its announcement. What has particularly impressed many is the team’s swift and well-organized execution — from beginning pre-production in February to successfully starting the shoot within just three months, showcasing the dedication and clarity of vision behind the film.

The launch event was attended by director Venkat Prabhu, who gave the ceremonial clap, while director Ponram switched on the camera and conveyed his wishes to the team. The spiritually themed launch ceremony perfectly reflected the essence of the film.

The movie is directed by Vishnu Sasi Shankar, best known for the Malayalam blockbuster “Malikappuram.” His ability to portray spiritual themes with emotional depth and visual richness has raised expectations for “Tat Tvam Asi.”

Actor Vaibhav will be seen in a completely different role in this film, alongside Meenakshi Govindarajan as the female lead. The cast also includes Aravind Akash, Aadukalam Naren, and several other notable actors in pivotal roles.

Music for the film is composed by Premgi Amaren, adding further curiosity among fans. Cinematography is handled by Yuvan Selva, editing by Praveen KL, art direction by Surya Rajeevan, and action choreography by Sakthi Saravanan.

One of the film’s major highlights is said to be its unique mix of spirituality and commercial action elements. Sources reveal that the screenplay has been designed to appeal equally to family audiences and youngsters.

Meanwhile, Tantra Films is also producing another ambitious project titled “Arya Kerala Varman,” which is being developed with historical and spiritual themes. This indicates the production house’s growing interest in creating large-scale content rooted in culture and spirituality.

The makers are reportedly planning to release “Tat Tvam Asi” during the upcoming Ayyappa Mandala season this year. With its combination of spiritual emotions and mass entertainment elements, the film is expected to attract a wide audience and emerge as one of the most anticipated releases of the season.