
கோலாலம்பூரில் ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்ட இசை விருந்து!
2027 ஜூன் 12-ல் ‘வொண்டர்மென்ட் டூர்’ – 90 சதவீதம் தமிழ் பாடல்கள்; டிசம்பர் 4 முதல் டிக்கெட் விற்பனை!
கோலாலம்பூர்: இசை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்டமான ‘வொண்டர்மென்ட் டூர்’ இசை நிகழ்ச்சி, வரும் 2027 ஜூன் 12ஆம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனத்தின் டத்தோ மாலிக் ஏற்பாட்டில், டிஎம் ஸ்டேடியம் நேஷனலில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சி, மலேசிய ரசிகர்களுக்கு மறக்க முடியாத இசை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.ஆர். ரஹ்மானுடன் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் முதன்முறையாக இணைந்து நடத்தும் இந்த இசை நிகழ்ச்சி, அந்நிறுவனத்தின் பொழுதுபோக்குத் துறைப் பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமையவுள்ளது. அண்மையில் ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழாவை வெற்றிகரமாக நடத்தியதைத் தொடர்ந்து, சர்வதேசத் தரத்திலான மற்றுமொரு பிரம்மாண்ட நிகழ்ச்சியை மலேசிய ரசிகர்களுக்கு வழங்க மாலிக் ஸ்ட்ரீம்ஸ் தயாராகியுள்ளது.
தமிழ் ரசிகர்களுக்கு முக்கியத்துவம்!
இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் உருவான புகழ்பெற்ற பாடல்களில் 90 சதவீதம் தமிழ் பாடல்களாகவும், எஞ்சிய 10 சதவீதம் அவரது பிரபலமான இந்திப் பாடல்களாகவும் இடம்பெறவுள்ளன.
தமிழ் இசை ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பையும், கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு இந்தப் பாடல் பட்டியல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், தமிழ் ரசிகர்களுக்கு இந்நிகழ்ச்சி கூடுதல் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தலைமுறைகளைக் கடந்து ஒலிக்கும் இசை!
‘ரோஜா’ திரைப்படம் தொடங்கி சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல்வேறு இசைப் படைப்புகள் வரை, தனது தனித்துவமான இசையமைப்பாலும் புதுமையான மெட்டுகளாலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர் ஏ.ஆர். ரஹ்மான்.
காலத்தால் அழியாத இனிய மெட்டுகள், காதலைப் பேசும் பாடல்கள், இளைய தலைமுறையை உற்சாகப்படுத்தும் இசை என அவரது இசைப் பயணத்தின் பல்வேறு காலகட்டங்களை நினைவூட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி அமையவுள்ளது.
இந்தியத் திரையிசையை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றதுடன், சர்வதேச இசைக் கலைஞர்களுடனான கூட்டணிகள் மூலமாகவும் இசையின் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ள ஏ.ஆர். ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி என்பதால், மலேசியா மட்டுமின்றி அண்டை நாடுகளிலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசை, ஒளி, தொழில்நுட்பம், பிரம்மாண்ட மேடை அமைப்பு என அனைத்தும் ஒருங்கிணைந்த ஓர் உயர்தர இசை அனுபவமாக ‘வொண்டர்மென்ட் டூர்’ அமையும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 4 முதல் அதிகாரப்பூர்வ டிக்கெட் விற்பனை!
இந்நிகழ்ச்சிக்கான அதிகாரப்பூர்வ டிக்கெட் விற்பனை 2026 டிசம்பர் 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை, மலேசிய நேரப்படி பிற்பகல் 2 மணிக்குத் தொடங்குகிறது.
டிக்கெட்டுகளை www.ticket2u.com.my என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விலை, இருக்கை வசதிகள் மற்றும் இதர நிகழ்ச்சி தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி குறித்த விவரங்கள்:
- நிகழ்ச்சி: ஏ.ஆர். ரஹ்மான் – வொண்டர்மென்ட் டூர்
- நாள்: 2027 ஜூன் 12, சனிக்கிழமை
- இடம்: டிஎம் ஸ்டேடியம் நேஷனல், கோலாலம்பூர்
- ஏற்பாடு: மாலிக் ஸ்ட்ரீம்ஸ் – டத்தோ மாலிக்
- டிக்கெட் விற்பனை: 2026 டிசம்பர் 4
- நேரம்: பிற்பகல் 2 மணி (மலேசிய நேரம்)
- இணையதளம்: www.ticket2u.com.my
ஒரு இசை மேதை… பிரம்மாண்டமான மைதானம்… தலைமுறைகள் கொண்டாடும் இசை… என கோலாலம்பூரை இசை வெள்ளத்தில் மூழ்கடிக்கத் தயாராகிறது ஏ.ஆர். ரஹ்மானின் ‘வொண்டர்மென்ட் டூர்’!
மலேசியத் தமிழ் ரசிகர்களுக்கு இது வெறும் இசை நிகழ்ச்சி மட்டுமல்ல; தங்களின் மனதோடு கலந்துவிட்ட இசைப்புயலின் பாடல்களை நேரில் கேட்டு ரசிக்கும் ஓர் அரிய கொண்டாட்டமாக அமையவுள்ளது.

A.R. Rahman’s Spectacular ‘Wonderment Tour’ Set to Take Kuala Lumpur by Storm on June 12, 2027
90% Tamil Songs and 10% Hindi Hits; Official Ticket Sales Begin on December 4, 2026
KUALA LUMPUR: Music lovers in Malaysia are in for an unforgettable musical experience as Oscar-winning music maestro A.R. Rahman brings his much-anticipated ‘Wonderment Tour’ to Kuala Lumpur on June 12, 2027.
Organised by Datuk Malik of Malik Streams, the grand-scale concert will take place at the iconic TM Stadium Nasional, bringing thousands of fans together for an extraordinary celebration of music, melodies and emotions.
The concert marks the first-ever collaboration between Malik Streams and A.R. Rahman, representing another significant milestone for the entertainment company as it continues to strengthen its presence in the international entertainment industry.
Following the tremendous success of the Jana Nayagan audio launch event, Malik Streams is once again gearing up to deliver a major entertainment spectacle, reaffirming its commitment to bringing world-class artists and exceptional live performances closer to audiences.
Tamil Music Takes Centre Stage
One of the biggest highlights of the Wonderment Tour will be its specially curated musical programme, with 90 per cent of the song selection featuring A.R. Rahman’s celebrated Tamil compositions, while the remaining 10 per cent will comprise some of his biggest Hindi hits.
Responding to the overwhelming love and requests from Tamil music fans, the organisers have placed special emphasis on Tamil songs to ensure that the concert offers a truly memorable experience for the local audience.
The carefully curated playlist is expected to take fans on a nostalgic and exhilarating musical journey through some of the most iconic compositions of A.R. Rahman’s illustrious career.
A Musical Journey Across Generations
From timeless melodies that have become part of everyday life to energetic chart-toppers that continue to captivate music lovers, the Wonderment Tour promises to celebrate the many musical milestones of A.R. Rahman’s remarkable journey.
Audiences can look forward to reliving their favourite songs, revisiting unforgettable musical memories and experiencing the magic of compositions that have transcended generations.
Over the decades, A.R. Rahman has established himself as one of India’s most celebrated musical icons through his distinctive sound, innovative compositions and extraordinary ability to transcend linguistic and cultural boundaries through music.
From Indian cinema to international collaborations, his musical contributions have continually redefined the global music landscape. His live performances are renowned for bringing together artistic excellence, innovation and powerful emotions.
A Grand Musical Celebration in Kuala Lumpur
With the Wonderment Tour, Kuala Lumpur is set to witness an electrifying celebration of A.R. Rahman’s musical legacy, bringing together fans from Malaysia and beyond under one roof.
More than just a concert, the event promises to be an immersive musical experience celebrating the timeless bond between an extraordinary musician and millions of admirers whose lives have been touched by his music.
With a legendary composer, a massive stadium setting and music cherished across generations, the Wonderment Tour is expected to become one of the major live entertainment highlights in Malaysia in 2027.
Official Ticket Sales and Event Information
The official ticket sales for this highly anticipated concert will commence on Friday, December 4, 2026, at 2.00 PM Malaysian Time.
Tickets will be available exclusively through the official ticketing platform, Ticket2U, at:
www.ticket2u.com.my
Further announcements, event information and exclusive updates will be released through the organisers’ official social media platforms.
As excitement builds towards this spectacular musical celebration, fans are encouraged to follow the official channels for the latest announcements and ticketing information.
One musical maestro. One iconic stadium. Music that transcends generations. Millions of emotions.
Kuala Lumpur, get ready to experience the magic, melodies and musical brilliance of A.R. Rahman like never before!
EVENT DETAILS
- Event: A.R. Rahman – Wonderment Tour
- Date: June 12, 2027
- Venue: TM Stadium Nasional, Kuala Lumpur, Malaysia
- Organiser: Malik Streams – Datuk Malik
- Official Ticket Sales: December 4, 2026
- Time: 2.00 PM (Malaysian Time)
- Ticketing Website: www.ticket2u.com.my
