
சுப்ரமணியா’ படத்தில் ஏசிபி அதிகாரியாக மிஷ்கின்… யுகேந்திரன் பாடிய பாடல்! வித்தியாசமான கதாபாத்திரங்களில் நட்டி, ரிச்சர்ட்!
வித்தியாசமான கதாபாத்திரங்களும், சுவாரஸ்யமான திரையுலகப் பின்னணியும் இணைந்து கவனம் ஈர்க்கிறது ‘சுப்ரமணியா’ திரைப்படம்.
மலேசியா வாசுதேவனின் மகனும், விஜய் நடிப்பில் வெளியான ‘யூத்’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவருமான நடிகர் யுகேந்திரன், தற்போது ‘சுப்ரமணியா’ திரைப்படத்தில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். மேலும், அவர் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், காவல் துறையில் உதவி ஆணையர் (ACP) கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் நட்டி, இப்படத்தில் பழங்குடியின மக்களின் தலைவராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் ரிச்சர்டும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதில் சுவாரஸ்யமான மற்றொரு தகவல் என்னவென்றால், விஜய் நடிப்பில் வெளியான ‘யூத்’ திரைப்படத்தின் இயக்குநர் வின்சென்ட் செல்வாவிடம் மிஷ்கின் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அப்போது உதவி இயக்குநராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய மிஷ்கின், இன்று அதே திரையுலகில் நடிகராகவும் இயக்குநராகவும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
யுகேந்திரனின் பாடல் பங்களிப்பு, மிஷ்கினின் காவல் அதிகாரி கதாபாத்திரம், நட்டியின் பழங்குடியினத் தலைவர் வேடம் எனப் பல சுவாரஸ்யமான அம்சங்களுடன் உருவாகி வரும் ‘சுப்ரமணியா’ திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mysskin as an ACP, Natty as a Tribal Leader, and Yugendran Sings for ‘Subramania’!
Yugendran, son of legendary singer Malaysia Vasudevan and the actor who played the villain opposite Vijay in the film ‘Youth’, has sung a song for the upcoming film ‘Subramania’. The film also features Mysskin, Natty and Richard in interesting and distinctive roles.
Actor and filmmaker Mysskin plays an Assistant Commissioner of Police (ACP) in ‘Subramania’. Actor Natty, who gained recognition for his performance in ‘Sathuranga Vettai’, portrays the leader of a tribal community, while actor Richard plays another important role in the film.
Adding to the film’s interesting highlights, Yugendran, son of veteran playback singer Malaysia Vasudevan, has lent his voice to a song in ‘Subramania’. Yugendran is also currently working with music maestro Ilaiyaraaja.
Another interesting connection is that Mysskin began his journey in the film industry as an assistant director to filmmaker Vincent Selva, who directed Vijay’s ‘Youth’. Years later, Mysskin has established himself as a celebrated filmmaker and actor in Tamil cinema.
With Mysskin in the role of a police officer, Natty portraying a tribal leader, Richard in a significant character and Yugendran’s musical contribution, ‘Subramania’ brings together several interesting elements that have raised expectations among moviegoers.
