கோலாலம்பூரில் ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்ட இசை விருந்து!
கோலாலம்பூரில் ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்ட இசை விருந்து!
2027 ஜூன் 12-ல் ‘வொண்டர்மென்ட் டூர்’ – 90 சதவீதம் தமிழ் பாடல்கள்; டிசம்பர் 4 முதல் டிக்கெட் விற்பனை!
கோலாலம்பூர்: இசை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்டமான ‘வொண்டர்மென்ட் டூர்’ இசை நிகழ்ச்சி, வரும் 2027 ஜூன் 12ஆம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனத்தின் டத்தோ மாலிக் ஏற்பாட்டில், டிஎம் ஸ்டேடியம் நேஷனலில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சி, மலேசிய ரசிகர்களுக்கு மறக்க முடியாத இசை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.ஆர். ரஹ்மானுடன் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் முதன்முறையாக இணைந்து நடத்தும் இந்த இசை நிகழ்ச்சி, அந்நிறுவனத்தின் பொழுதுபோக்குத் துறைப் பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமையவுள்ளது. அண்மையில் ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழாவை வெற்றிகரமாக நட...
