
இவர் இயக்குநர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் அரசியிலில் ஈடுபட மறுக்கும் இளைஞராகவும், தனது தந்தையை கொன்றவர்களை பழிவாங்கும் மகனாகவும் நடித்திருந்தார்.
நடிகை சுனைனாவுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த இந்த படத்தில், பாக்ஸ் ஆபிசில் இடம் பிடித்துதோடு, பல்வேறு பாசிடிவ்ட் ரிவியூகளை பெற்றது.
இவர் நடித்த இரண்டாவது படமான உதயனில் இரட்டை வேடம் ஏற்றி நடித்திருந்தார். தொடர்ந்து, இயக்குனர் சந்தகுமார் இயக்கத்தில் மௌன குரு படத்தில் நடித்தார். இந்த படம் 2013ம் ஆண்டில் நடந்த ஹாங்காங் சர்வதேச பிலிம் பெஸ்டிவலில் திரையிடப்பட்டது.
இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், தமிழரசுவின் மகனும் ஆவார். இவரது தந்தை தமிழரசு, தமிழக முன்னாள் துணை முதல்வர் மு க ஸ்டாலினின் சகோதார் என்பது குறிப்பிடத்தக்கது. இதும்த்டுமின்றி அருள்நிதி மூன்று திரைப்படங்களை தயாரித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களாக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தயாநிதி அழகிரி ஆகியோரும் இவரது உறவினர்கள்.
சென்னையில் உள்ள மைக்கேல் அகாடமியில் படித்த இவர், பட்டப்படிப்பை லயோலா கல்லூரியில் முடித்தார். பின்னர் மேல்படிப்புக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
இரவுக்கு ஆயிரம் கண்கள், பிருந்தாவனம், ஆறாது சினம், நாலு போலீசும் நல்ல இருந்த ஊரும், டிமான்ட்டி காலனி, மௌன குரு, வம்சம் நடித்து கொண்டு இருக்கும் படம் புகழேந்தி என்னும் நான்
