
வேல்முருகன் தங்கசாமி மனோகர் சார்லி அல்லது சுருக்கமாக சார்லி தமிழ்த் திரைப்பட நடிகர். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தவர். இயக்குநர் கே. பாலசந்தரின் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் 1983 ஆம் ஆண்டில் அறிமுகமானவர். நகைச்சுவை, குணசித்திரம் என்று பல பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் நடித்த படங்கள்
பட்டினப்பாக்கம், ஒரு கனவு போல, மாநகரம், வேங்கை, ஆனந்த தாண்டவம், வெள்ளித்திரை, சாது மிரண்டால், நெஞ்சிருக்கும் வரை, வேல், திருமகன், ஒரு கல்லூரியின் கதை, மழை, ஐயா, அந்நியன், பம்மல் கே. சம்பந்தம், ஜெமினி, பார்த்தாலே பரவசம், பிரெண்ட்ஸ், காசி, என்னவளே, தெனாலி, கண்ணுக்குள் நிலவு, என்றென்றும் காதல், அமர்க்களம், நினைத்தேன் வந்தாய், நிலாவே வா, ஒன்ஸ்மோர், காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக, டூயட், அமராவதி, சிங்காரவேலன்
