
கல்யாண் குமார் கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். 1950- 1999 காலகட்டத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருநூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார். இவர் தமிழில் முதன்முதலாக நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இவர் நடித்த கடைசி தமிழ்த் திரைப்படம் 1994 ஆம் ஆண்டு வெளியான ஜெய் ஹிந்த் ஆகும்.
இவர் நடித்த படங்கள்: தாயின் கருணை, தென்றல் வீசும், கடவுளின் குழந்தை, நெஞ்சில் ஓர் ஆலயம், மணி ஓசை
