

தமிழ் சினிமாவில் தனி இடம் பிடிச்சவர்களில் ஒருவர் நடிகர் நெப்போலியன்.
1963ஆம் வருசம் இதே ஜனவரி 2ல் திருச்சியில் பிறந்த இவருடைய உண்மையான பெயர் குமரேசன் துரைசாமி. இவரது குடும்பத்தில் 6 குழந்தைகள். இவர் 5வது மகனாக பிறந்தார்.
திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தார். பின்னர் தனது 27 வயதில் உதயம் என்ற படத்தினை பார்த்து இவருக்கு நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. 1991ல் பாரதிராஜவால் புது ‘நெல்லு புது நாத்து’ என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன்பின்னர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்தார் நெப்போலியன்.
இவருக்கு ஜெயசுதா நெப்போலியன் என்ற மனைவியும், தனுஷ் நெப்போலியன் மற்றும் குனால் நெப்போலியன் என்ற மகன்களும் உள்ளனர். தற்போது இவரது குடும்பம் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் வசித்து வருகின்றனர். ஏனெனில் அவருடைய மூத்த தனுஷ் நெப்போலியனுக்கு தசைவளக் குறைபாட்டு நோய் உள்ளது. இதனால் கடந்த பல வருடங்களாக அமெரிக்காவில் தங்கி அதற்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
மேலும், நெப்போலியன் ‘கிறித்துமஸ் கூப்பன் ‘ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். டேனியல் இயக்கியுள்ள இந்த படத்தில் கோர்ட்னி மேத்யூஸ், ஷீனா மோனின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நெப்போலியனுக்கு ஜோடியாக வெனிசுலா அழகி நடித்துள்ளார்.நெப்போலியனுக்கு இது இரண்டாவது ஹாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
