புளிமூட்டை ராமசாமி  எனப் பரவலாக அறியப்பட்ட டி. ஆர். ராமசுவாமி ஐயர் தமிழ் நாடகத், திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.
இவரது இயற்பெயர் தூத்துக்குடி இராமசுவாமி ஐயர். என். எஸ். கிருஷ்ணன் குழுவினருடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 1941 ஆம் ஆண்டில் வெளிவந்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படத்தில் நடிக்கும் போது என். எஸ். கிருஷ்ணன் இவரை “புளிமூட்டை” என்றே அழைத்து வந்தார். இதனால் இவர் “புளிமூட்டை ராமசாமி'” என்றே பிரபலமாக அழைக்கப்பட்டார்.
ராமசாமி முதலில் டி.கே.எஸ். நாடகக்கம்பனியில் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். கம்பனி கலைக்கப்பட்டதும், தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்குச் சென்று அங்கேயே திருமணமும் செய்து கோவில் ஒன்றில் பட்டர் வேலையில் சேர்ந்தார். சில மாதங்களில் மனைவி இறந்து விடவே, அவரது தந்தை மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்தார். பின்னர் என். எஸ். கிருஷ்ணனின் நாடகக் கம்பனியில் சேர்ந்தார்.
இவர் நடித்த படங்கள்:  அலிபாபாவும் நாற்பது திருடர்களும், கண்ணகி, குபேர குசேலா, மனோன்மணி, ஹரிதாஸ், பிரபாவதி, தெய்வ நீதி, தன அமராவதி, ராஜகுமாரி, அபிமன்யு, மோகினி, மருதநாட்டு இளவரசி, விசித்ர வனிதா, பில்ஹணா, கன்னியின் காதலி, பாரிஜாதம், வனசுந்தரி, மணமகள், சர்வாதிகாரி, குமாரி, மதன மோகினி, நல்ல தங்கை

Related