Monday, August 10
Shadow

நடிகர் சரத்குமார் பிறந்த தினம் இவரை பற்றிய சில வரிகள்

இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார். முன்னால் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார். அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார். இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார். இவர் 2011ல் தென்காசி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார்.

தமிழ் சினிமாவில் முக்கிய பங்கு வகித்தவர் தென் இந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மேல் பதவி வகித்தவர் அதோடு நடிகர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் ஓடி உதவி செய்வதில் முதல் ஆளாக இருந்தவர் பல வெற்றி படங்களுக்கு சொந்தகாரர் இவர் மகள் வரலக்ஷ்மியும் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகி என்பது குறிப்பிடவேண்டிய விஷயம் இவர் பத்திரிக்கையாளராகவும் இருந்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடவேண்டிய விஷயம்

இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்

புலன் விசாரணை, சேரன் பாண்டியன், நட்புக்காக, சூரிய வம்சம், நாட்டாமை, நேதாஜி, ரகசியப் போலீஸ்,
கம்பீரம், ஏய், சாணக்யா, தலைமகன், காஞ்சனா, மற்றும் pala

இவர் தயாரிப்பாளராக இருந்து தயாரித்த படங்கள்

கண் சிமிட்டும் நேரம், ஜித்தன், தலைமகன், கன்னமூச்சி எனடா, ஜக்குபாய், சென்னையில் ஒரு நாள், புலிவால், சண்டமாருதம், மாறி, இது என்ன மாயம்

இவர் கதை ஆசிரியராக பணியாற்றிய படங்கள்

சண்டமாருதம்

இவர் இயக்குனராக பணியாற்றிய படம்

தலைமகன்

இவர் பாடகராக மாறி பாடல் பாடிய படங்கள்

ஏய், சாணக்கியா, தலைமகன், இலக்கணம் இல்லா காதல், சண்டமாருதம்