Monday, August 10
Shadow

“அதிகாரம் கேட்பவள் அல்ல… கையில் எடுத்துக் கொள்பவள்!” – ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தில் அதிரடி அவதாரம் எடுத்த தபு!

“அதிகாரம் கேட்பவள் அல்ல… கையில் எடுத்துக் கொள்பவள்!” – ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தில் அதிரடி அவதாரம் எடுத்த தபு!

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் புதிய படத்தில் ‘கௌரி ஹெக்டே’ கதாபாத்திர கிளிம்ப்ஸ் வெளியீடு

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்தியத் திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’. விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் இருவரும் முதன்முறையாக இணைந்திருக்கும் இப்படம், ஆக்‌ஷன், உணர்வு, மர்மம் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தின் அறிவிப்பு, டைட்டில் லுக், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவை ஏற்கெனவே ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தற்போது படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான நடிகை தபுவின் ‘கௌரி ஹெக்டே’ கதாபாத்திர கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

பொதுவாகவே தனது கதாபாத்திரத் தேர்வுகளால் தனி முத்திரை பதித்து வரும் தபு, இந்தப் படத்தில் இதுவரை பார்த்திராத வகையில் ஒரு அதிகாரமிக்க, அச்சமற்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

‘கௌரி ஹெக்டே’ – பெயரே அதிகாரத்தின் அடையாளம்!

நகரின் சேரிப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு தொடங்கும் இந்த கிளிம்ப்ஸ், படத்தின் இருண்ட மற்றும் கடினமான உலகத்தை முதலில் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. அந்தச் சூழலில் கார் ஒன்றில் கம்பீரமாக வந்து இறங்கும் தபு, சிகரெட்டைப் பற்றவைத்து அங்குள்ள சூழலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.

அவரை எதிர்த்து நிற்கும் உள்ளூர் ரவுடிக்கு முதலில் கடுமையான எச்சரிக்கை விடுப்பதோடு, அடுத்த நொடியில் தனது அதிகாரத்தை ஒரு ‘பளார்’ அறை மூலம் வெளிப்படுத்துகிறார்.

அந்த ஒரு காட்சியே ‘கௌரி ஹெக்டே’ யார்? என்பதற்கான பதிலை அழுத்தமாகச் சொல்லிவிடுகிறது.

அதிகாரத்தைத் தேடுபவர் அல்ல…
அதிகாரத்தை தன் வசப்படுத்துபவர்.

ரவுடிகளை எதிர்கொள்ளும் அதிகாரி!

கௌரி ஹெக்டே கதாபாத்திரம் வெறுமனே ஒரு சக்தி வாய்ந்த அதிகாரியாக மட்டுமல்லாமல், எதற்கும் அஞ்சாத, யாரிடமும் சமரசம் செய்யாத பெண்ணாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தெருவில் அவரைச் சுற்றி உள்ளூர் மக்கள் மற்றும் ரவுடிகள் திரண்டாலும், அவர் சற்றும் பதற்றமடைவதில்லை. மாறாக, அவர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு, கையில் இருக்கும் மரத்தடியால் அதிரடியாக தாக்கி சூழ்நிலையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.

சுற்றிலும் காவல்துறையினர் இருந்தாலும், கூட்டம் இருந்தாலும், தன்னை எதிர்ப்பவர்களை அடக்குவதில் அவர் காட்டும் துணிச்சலும் ஆக்ரோஷமும் அந்தக் கதாபாத்திரத்தின் வலிமையை வெளிப்படுத்துகின்றன.

கிளிம்ப்ஸில் இடம்பெறும் ‘One Fearless Woman’, ‘Powerful Officer’, ‘Ruthless’, ‘Merciless’, ‘Devil in the Department’ போன்ற வார்த்தைகள் கௌரி ஹெக்டே கதாபாத்திரத்தின் தன்மையை மேலும் அழுத்தமாகப் பதிவு செய்கின்றன.

“கௌரி ஹெக்டே… துணை ஆணையர், வருமான வரித்துறை!”

கிளிம்ப்ஸின் முக்கியமான தருணமாக அமைவது, தபு தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் காட்சிதான்.

“கௌரி ஹெக்டே… துணை ஆணையர், வருமான வரித்துறை” என்ற அவரது அறிமுகம், அந்த கதாபாத்திரத்தின் அதிகாரத்தையும் கம்பீரத்தையும் ஒரே வரியில் வெளிப்படுத்துகிறது.

பூரி ஜெகன்நாத்தின் படங்களில் கதாபாத்திர அறிமுகங்களுக்கு எப்போதுமே தனி முக்கியத்துவம் இருக்கும். கதாபாத்திரத்தின் குணநலன்களை சில நொடிகளிலேயே ரசிகர்களுக்கு உணர்த்தும் அவரது பாணி, இந்த கிளிம்ப்ஸிலும் தெளிவாகத் தெரிகிறது.

அந்த வகையில், கௌரி ஹெக்டே கதாபாத்திரமும் பூரி ஜெகன்நாத்தின் வித்தியாசமான கதாபாத்திர வடிவமைப்பில் மற்றொரு சுவாரசியமான படைப்பாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை இந்த கிளிம்ப்ஸ் ஏற்படுத்தியுள்ளது.

கதாபாத்திரமாகவே மாறிய தபு!

கம்பீரமான தோற்றம், கூர்மையான பார்வை, அதிரடியான உடல்மொழி என தபுவின் திரை இருப்பு இந்தக் கிளிம்ப்ஸில் தனித்து தெரிகிறது.

கௌரி ஹெக்டே கதாபாத்திரத்திற்கு தேவையான அதிகாரம், மிடுக்கு, அச்சுறுத்தல் ஆகியவற்றை தபு தனது நடிப்பின் மூலம் அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இதனால், இப்படத்தில் தபுவின் கதாபாத்திரம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற ஆர்வமும் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

இந்த கிளிம்ப்ஸில் விஜய் சேதுபதியின் சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதனால், விஜய் சேதுபதி ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்கும் கௌரி ஹெக்டே கதாபாத்திரத்திற்கும் இடையிலான தொடர்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

வலுவான நட்சத்திரப் பட்டாளம்

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்கிறார். கன்னட நடிகர் துனியா விஜய் எதிர்மறை சாயல் கொண்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரம்ஹாஜி மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

படத்தின் இருண்ட மற்றும் யதார்த்தமான உலகத்தை திரையில் வலுவாகக் கொண்டு வர தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது.

ஒளிப்பதிவை சாம் கே. நாயுடு மேற்கொள்ள, ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். படத்தொகுப்பை சந்தோஷ் நூஜில்லா கவனிக்கிறார். VFX பணிகளை அனில் பாடூரி மேற்கொள்கிறார்.

பான் இந்திய அளவில் தயாராகும் ‘ஸ்லம் டாக்’

‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் தங்களது பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கின்றனர். ஜே.பி. மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜே.பி. நாராயண ராவ் கொண்ட்ரோல்லாவும் இணை தயாரிப்பில் இடம்பெற்றுள்ளார்.

டைட்டில் லுக் முதல் ஃபர்ஸ்ட் லுக், டீசர் என ஒவ்வொரு அப்டேட்டிலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் படக்குழு, தற்போது தபுவின் கதாபாத்திர கிளிம்ப்ஸ் மூலம் படத்தின் உலகத்தையும் கதாபாத்திரங்களையும் சுற்றியுள்ள மர்மத்தை மேலும் அதிகரித்துள்ளது.

விஜய் சேதுபதியின் நடிப்பு, பூரி ஜெகன்நாத்தின் அதிரடி இயக்கம், தபுவின் வித்தியாசமான கதாபாத்திரம் என பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகத் தயாராகி வருகிறது.

தபுவின் ‘கௌரி ஹெக்டே’ யார்? அவரது அதிகாரத்திற்கு விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்துடன் என்ன தொடர்பு? என்ற கேள்விகளுக்கு விடை காண ரசிகர்களை திரையரங்கிற்கு அழைத்துச் செல்லும் வகையில், இந்த கிளிம்ப்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

நடிகர்கள்:
விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் குமார், பிரம்ஹாஜி, விடிவி கணேஷ்.

தொழில்நுட்பக் குழு:
எழுத்து & இயக்கம் – பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் – பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், ஜே.பி. நாராயண ராவ் கொண்ட்ரோல்லா
வழங்குபவர் – சார்மி கவுர்
தயாரிப்பு நிறுவனம் – பூரி கனெக்ட்ஸ்
CEO – விஷு ரெட்டி
இசை – ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்
ஒளிப்பதிவு – சாம் கே. நாயுடு
படத்தொகுப்பு – சந்தோஷ் நூஜில்லா
VFX – அனில் பாடூரி
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங் – ஹாஷ்டாக் மீடியா

 

 

“She Doesn’t Seek Power, She Commands It!” – Tabu’s Fierce Avatar as Gowri Hegde Unveiled in Vijay Sethupathi’s ‘Slum Dog: 33 Temple Road’

Power, Fearlessness and Attitude: Tabu’s Character Glimpse Raises Expectations for Puri Jagannadh’s Pan-India Action Drama

Expectations are steadily building around ‘Slum Dog: 33 Temple Road’, the much-awaited action drama that brings together acclaimed actor Vijay Sethupathi and dynamic filmmaker Puri Jagannadh for the first time.

The film has already generated curiosity with its title reveal, first-look poster and teaser. Now, the makers have taken the excitement a notch higher with the release of an intriguing character glimpse introducing Tabu as Gowri Hegde, a powerful Deputy Commissioner from the Income Tax Department.

The glimpse offers a striking introduction to a character who appears to be as commanding as she is unpredictable.

Gowri Hegde: A Woman Who Commands Authority

Set against the gritty backdrop of the city’s slum areas, the glimpse first establishes the harsh and intense world of the film before introducing Tabu in a powerful manner.

Arriving in a car, lighting a cigarette and immediately taking charge of the situation, Tabu’s Gowri Hegde makes it clear that she is not someone who waits for authority to be handed to her.

When confronted by a local goon, she issues a stern warning before delivering a sharp slap, instantly establishing the character’s fearless and uncompromising nature.

Gowri Hegde is presented not merely as a powerful officer but as a woman who refuses to back down under any circumstances.

Fearless. Ruthless. Uncompromising.

The character takes on hostile locals and goons right in the middle of the streets, physically confronting those who challenge her authority. Even as police personnel and a crowd surround her, Gowri Hegde remains completely unfazed.

A wooden baton becomes her weapon as she takes control of the chaotic situation, reinforcing the image of an officer who is willing to go to any extent to establish her authority.

The words appearing throughout the glimpse — “One Fearless Woman,” “Powerful Officer,” “Ruthless,” “Merciless” and “Devil in the Department” — offer a glimpse into the personality and intensity of Gowri Hegde.

“Gowri Hegde… Deputy Commissioner, Income Tax.”

The highlight of the glimpse arrives towards the end when Tabu introduces herself with complete authority:

“Gowri Hegde, Deputy Commissioner, Income Tax.”

The introduction carries the trademark swagger and punch associated with Puri Jagannadh’s memorable character presentations.

Known for creating larger-than-life characters with distinctive personalities, Puri Jagannadh appears to have crafted yet another fascinating character in Gowri Hegde. The glimpse leaves viewers wondering about her role in the larger narrative and her connection with Vijay Sethupathi’s character.

Tabu Owns the Screen

Tabu looks commanding and intense throughout the glimpse. Her sharp expressions, confident body language and powerful screen presence make Gowri Hegde instantly stand out.

She brings an unmistakable sense of authority and menace to the character, making the glimpse particularly intriguing. The brief appearances of Vijay Sethupathi further add to the curiosity surrounding the film’s story and the relationship between the key characters.

A Strong Ensemble Cast

The film features a strong ensemble cast, with Samyuktha playing the female lead. Popular Kannada actor Duniya Vijay takes on a negative-shaded role, while Brahmaji and VTV Ganesh are also part of the prominent cast.

With Vijay Sethupathi leading the project and Tabu stepping into such a distinctive role, the film brings together an interesting combination of performers from different industries.

A Gritty World Backed by a Strong Technical Team

The technical crew plays a crucial role in shaping the film’s dark and gritty world.

Sam K Naidu is handling the cinematography, while Harshavardhan Rameshwar is composing the music. Santosh Noozilla is responsible for the editing and Anil Paduri is handling the VFX.

The makers are looking to create an intense cinematic world that combines raw emotions, hard-hitting action and mystery.

Vijay Sethupathi – Puri Jagannadh Combination Creates Curiosity

Produced by Puri Jagannadh and Charmme Kaur under the banner of Puri Connects, in association with JB Motion Pictures, the film has been steadily building anticipation with every promotional update.

From the title look and first-look poster to the teaser and the latest character glimpse, the makers have kept the focus firmly on the film’s distinctive characters and its gritty universe.

With Vijay Sethupathi and Puri Jagannadh collaborating for the first time, along with Tabu’s striking portrayal of Gowri Hegde, ‘Slum Dog: 33 Temple Road’ is emerging as one of the interesting pan-India action dramas to watch out for.

The film is gearing up for a pan-India release in Telugu, Tamil, Kannada, Malayalam and Hindi.

Cast

Vijay Sethupathi, Samyuktha, Tabu, Duniya Vijay Kumar, Brahmaji and VTV Ganesh.

Technical Crew

Writer & Director: Puri Jagannadh
Producers: Puri Jagannadh, Charmme Kaur & JB Narayan Rao Kondrolla
Presenter: Charmme Kaur
Production Banner: Puri Connects
CEO: Vishu Reddy
Music: Harshavardhan Rameshwar
Cinematography: Sam K Naidu
Editing: Santosh Noozilla
VFX: Anil Paduri
PRO: Yuvraaj
Marketing: Haashtag Media