
தமிழ் சினிமாவில் சிம்புக்கு மிக பெரிய தோல்வி படமென்றால் அது அன்பானவன் அடங்காதவன் அசரதவன் தான் இதனால் அவரின் சினிமா வாழ்கை மிகவும் மோசமானது இதை சரி பண்ண அவர்மிக பெரிய போராட்டக்கு பிறகு தன் மார்கெட்டை உயர்த்தினார் ஆனலுமிந்த படத்தின் பிரச்னை மட்டும் இன்னும் ஓய்ந்தபாடு இல்லை
அன்பானவன் அசராவதன் அடங்காதவன் படம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கும், அப்படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பனுக்கும் பிரச்னை ஓடிக் கொண்டிருக்கிறது. இடையில் அமைதியாக இருந்த இந்த பிரச்னை இப்போது மீண்டும் கிளம்பி உள்ளது.
‘ஏ.ஏ.ஏ, படத்தைத் தொடர்ந்து எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்று கேட்டு, நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தேன். அந்த நஷ்ட ஈட்டுத் தொகையை கொடுக்கும் வரையில், வேறு படத்தில் நடிக்கக்கூடாது என்றும் தயாரிப்பாளர் சங்கம் கூறியிருந்தது. ஆனால், அவர் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்ததோடு, அவரை வைத்து இயக்குநர் சுந்தர் சி புதுப்படம் எடுக்கிறார். அதனால், இதையெல்லாம் வலியுறுத்தி மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறேன்’ என, புதிய பிரச்னையை கிளப்பி இருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.
இந்த பிரச்னை தொடர்பாக, ஓரிரு நாளில் தயாரிப்பாளர் சங்கம் கூடி விவாதிக்க இருக்கிறது. இதனால் சிம்பு மற்றும் அவர் நடிக்கும் படங்களுக்கு சிக்கல் உருவாகி உள்ளது
