Tuesday, February 11
Shadow

ஹீரோவாக நடிக்கும் பிரபல காமடி நடிகர்

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி.  வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா உள்ளிட்ட படங்களில் சிவகார்த்திகேயனுடனும், , என தமிழ் சினிமாவின் மிக பெரிய விஜய், சூர்யா படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் சூரி.

துவக்கத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.  கொஞ்சம் கொஞ்சமாக வடிவேலு சினிமாவை விட்டு ஒதுங்கிய பிறகு அவரது இடத்திற்கு வந்துவிட்டார் பரோட்டா சூரி.

பிரலமான நகைச்சுவை நடிகர்கள் ஹீரோ வாக மாறுவது தொடர்ந்து சினிமாவில் நடைபெற்று வருகிறது.விவேக்,வடிவேலு,வரிசையில் தற்போது சூரி நடிகராக புதிய அவதாரம் ஒன்றை எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெகுநாட்களாக இந்த செய்தி உலவி வரும் நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அசுரன் படம் முடிவடைந்ததையடுத்து, தற்போது சூரியை ஹீரோவாக வைத்து படம் எடுக்கவுள்ளதாக வெற்றிமாறன் கூறியுள்ளார்.