Wednesday, February 12
Shadow

நடிகை சுமலதா பிறந்த தின பதிவு

சுமலதா இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் இருநூறிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்குத் திரைப்படங்கள், மலையாளத் திரைப்படங்கள், கன்னடத் திரைப்படங்கள் மற்றும் இந்தித் திரைப்படங்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார்.

இவர் தமிழ்நாட்டின் சென்னையில் 1963ல் பிறந்தவர். மலையாளத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற இவர், கன்னடத் திரைப்பட நடிகரான அம்பரீஷை திருமணம் செய்து கொண்டார். தற்போது பெங்களூரில் வசிக்கின்றார்.

பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன், சுயேட்சை வேட்பாளரான நடிகை சுமலதா, 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மண்டியா மக்களவைத் தொகுதியிலிருந்து வென்றார்.

இவர் நடித்த தமிழ் படங்கள்: கரையெல்லாம் செண்பகப்பூ, குடும்பம் ஒரு கதம்பம், முரட்டுக் காளை, ஒரு ஓடை நதியாகிறது