Monday, April 27
Shadow

நடிகர் விக்ரமுடன் இணையும் இமைக்கா நொடிகள் இயக்குனர் அஜய் ஞானமுத்து

தமிழ் சினிமாவில் தொடர்ந்து இரண்டு வெற்றிகளை கொடுத்த இயக்குனர் என்றால் அது அஜய் ஞானமுத்து அதுவும் ஓயரண்டு படங்களும் மிக பெரிய பிரமாண்ட வெற்றிகள் அது முதல் டிமாண்டி காலனி அடுத்து நயன்தாரா நடிப்பில் உருவான இமைக்க நொடிகள் இந்த இரண்டு பலன்களும் ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்ப்பு கிடைத்தது அதோடு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி கிடைத்தது.

இமைக்கா நொடிகள்’ படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் அஜய் ஞானமுத்து. முந்தைய படத்தைப் போலவே, இதிலும் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகருடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார்.
முழுக்கதையையும் முடித்துவிட்டு, விக்ரமிடம் கூறியுள்ளார் அஜய் ஞானமுத்து. அவருக்கு கதை பிடித்திருந்ததால், உடனடியாகத் தேதிகள் ஒதுக்கிக் கொடுத்துள்ளார். இதனால், ‘கடாரம் கொண்டான்’, ‘மகாவீர் கர்ணா’ ஆகிய படங்களுக்கு இடையே இப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் விக்ரம்.
இக்கூட்டணி இணையும் படத்தைத் தயாரிக்க, முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளன