திரில்லர் இயக்குனருடன் இணையும் விக்ரம்
தமிழ் சினிமாவின் வித்தியாசம் என்றால் அது விக்ரம் இவர் நடிக்கும் படங்கள் என்றாலே நிச்சயமாக வித்தியாசமான கதைக்களம் இருக்கும் அதோடு இவர் தேர்வு செய்யும் இயக்குனரும் மிகவும் திறமைசாலி யான இயக்குனராக இருப்பார் ஆம் அந்த வகை ஏற்கனவே இரண்டு மிரட்டும் ஹிட் அதுவும் திரில்லர் ஹிட் கொடுத்த இயக்குனருடன் இணைகிறார்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள்' ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த வருடம் வெளிவந்த படங்களில் 'இமைக்கா நொடிகள்' படமும் சுமாரான வெற்றி பெற்ற படங்களின் வரிசையில் இடம் பிடித்தது.
விக்ரம் தற்போது 'கடாரம் கொண்டான்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் ஜுன் மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' மீண்டும் எப்போது ஆரம்பமாகும் என்பது யாருக்கும் தெரியாது. ...

