Wednesday, October 28
Shadow

அசுரன் புகழ் அம்மு அபிராமி நான் வியய்ந்து பார்க்கும் நடிகை பிரபல இயக்குனர்

அம்மு அபிராமி,
ரேவதிக்கு பிறகு, நான் பார்த்து வியந்த நடிகை.
நான் இயக்கும் “பேட்டரி” படத்தின் நாயகி.
ஒரு காட்சிக்கான சூழலை சொன்னால் போதும்,
கற்பூரமாய் பற்றிக் கொள்வார்.
எதிர் கால சினிமாவில், இவருக்கு, ஒரு நல்ல இடம் காத்திருக்கிறது.
இவர் ஏற்கனவே நடித்த, துப்பாக்கி முனை, ராட்சசன், அசுரன் ஆகியப் படங்களில், முடிவில் இறந்து விடுவார்.
பேட்டரி படத்தின் முதல் செய்தி பத்திரிக்கையில் வந்தவுடனேயே, இவரது ரசிகர்கள் கேட்ட முதல் கேள்வி, ‘ இந்தப் படத்துலயும் இறந்துடுவியம்மா’ என்பதுதான்.
அவர்களுக்கு நான் சொல்லும் பதில், ‘இறக்க மாட்டார், உயிரோடுதான் இருப்பார்’ என்பதுதான்.

மணிபாரதி.