
ஆர்த்தி அகர்வால் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். அதிகமாக தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் பம்பரக் கண்ணாலே திரைப்படத்தில் நடித்துள்ளார்.
1984-ல் பிறந்த ஆர்த்தி அகர்வால் அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் பிறந்தவர் ஆர்த்தி அகர்வால். 2001-ல் பாகல்பன் என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். அடுத்து வெங்கடேஷ் ஜோடியாக நுவ்வு நாக்கு நச்சவ் என்ற படத்தில் நடித்தார்.
இதன் மூலம் அவர் தெலுங்கில் பிரபல நடிகையானார்.
தமிழில் பம்பரக் கண்ணாலே படத்தின் மூலம் 2005-ல் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து தெலுங்கிலேயே நடித்து வந்தார். 2009-ல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்கே திரும்பினார்.
அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தவர், சமீபத்தில்தான் ரணம் 2 என்ற தெலுங்குப் படத்தில் மீண்டும் நடித்தார்.
அதிகமான உடல் எடையைக் குறைப்பதற்காக அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த இவர் 2015 ஜூன் 6 அன்று எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். கொழுப்புறிஞ்சல் முறையில் அதிகமுறை சிகிச்சை மேற்கொண்டதன் விளைவாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மாரடைப்பின் காரணமாக இவர் மரணமடைந்ததாக இவரது உதவியாளர் தெரிவித்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
இவர் நடித்த தமிழ் படங்கள்
வின்னர், பம்பர கண்ணாலே
