Sunday, December 8
Shadow

நடிகை இந்திரஜா பிறந்த தின பதிவு

விஜய்க்கு ஜோடியாக நடித்து பின்னர் சீரியல்களில் கவனம் ஈர்த்தவர் நடிகை இந்திரஜா. இவருக்கு வாய்ப்புகள் எளிதில் கிடைக்கவில்லையாம். பல சிக்கல்கள், வேதனைகள் பட்டே உயர்ந்துள்ளார்.

விஜய் நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜித்தும் நடித்திருந்தார். அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இந்திரஜா. அதற்கு பிறகு ஏழு வருடங்கள் படம் இல்லாமல் சிரமப்பட்டுள்ளார்.

பின் எங்கள் அண்ணா என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். அதனை தொடர்ந்து முழுக்க முழுக்க சீரியல்கள் தான். பாசம் சீரியலின் மூலம் அவரின் சின்னத்திரை பயணம் தொடங்கியது.

எதிர்பாராமல் வந்த சிக்கலால் சீரியலே நிறுத்தப்பட்டதாம். பின் சோதனைகளை கடந்து தான் பைரவி, வள்ளி என முக்கிய சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இவர் நடித்த படங்கள்: எங்கள் அண்ணா, ராஜாவின் பார்வையிலே