
கஸ்தூரி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ஆத்தா உன் கோயிலிலே (1991), ராசாத்தி வரும் நாள் (1991), சின்னவர் (1992), செந்தமிழ்ப் பாட்டு (1992), அமைதிப்படை (1994) போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்தியா, தமிழ்நாடு மாநிலம், சென்னையில் மே 1, 1974 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளைப் சென்னையில் படித்து முடித்தார். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றார். இவருக்கு ரவிக்குமார் என்ற கணவரும் மற்றும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது கணவர் அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரிகிறார்.

ஒரு தென்னிந்திய நடிகை என்னும் 30 நிமிட குறும்படத்தினை கஸ்தூரி குறித்து ரிச்சர்டு பிரேயரும் என்.சி ராஜாமணி இயக்கியுள்ளனர். கஸ்தூரி சிறிது காலம் திரைத்துறையிலிருந்து விலகியிருந்தாலும் தி பைபாஸ் என்னும் இந்தி குறும்படத்திலும், 2010இல் தமிழ் படத்தின் வாயிலாகம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
இவர் நடித்த படங்கள்: உன் காதல் இருந்தால், இபி கோ-302, தமிழ் படம் 2, வடகறி, தமிழ்ப் படம், மலை மலை, இந்தியன்